T20 WC: 'நியூசிலாந்து அணி எப்போதும் ஐசிசி தொடர்களில் சிறப்பாகச் செயல்படும்; ஆனால்…!'- சூர்யகுமார்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச்.8) டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் மோத இருக்கின்றன.

அகமதாபத்தில் நடைபெறும் இந்தப் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வரலாற்று சாதனை படைக்குமா? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றனர்.

Ind vs Nz
Ind vs Nz

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நான் என் இயல்பான ஆட்டத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

அணிக்குத் தேவைப்படும்போது அதிரடியாக ஆடுவதே என் ஸ்டைல்.

கேப்டன் பதவி என் பேட்டிங்கை பாதிக்காது, மாறாக இன்னும் பொறுப்புடன் ஆடுவேன்.

டாஸ் வெல்வது சாதகம்தான், ஆனால் டாஸை மட்டுமே நம்பி நாங்கள் இல்லை.

நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் 200 ரன்களுக்கு மேல் குவித்து நியூசிலாந்தை அழுத்தத்திற்குள்ளாக்குவோம்.

நியூசிலாந்து ஒரு சத்தமில்லாமல் சாதிக்கும் அணி அவர்கள் எப்போதும் ஐசிசி தொடர்களில் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

ஆனால் அவர்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

குறிப்பாக ரச்சின் ரவீந்திரா மற்றும் சாண்ட்னர் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளத் தனித் திட்டங்கள் வைத்திருக்கிறோம்.

ரோஹித் பாய் மற்றும் விராட் பாய் விட்டுச் சென்ற பாதையில் நாங்கள் பயணிக்கிறோம். இந்த இளம்படை பயமில்லாமல் விளையாடுகிறது.

அவர்கள் இல்லாத குறையைத் தெரியாமல், கோப்பையை வென்று அவர்களுக்குப் பெருமை சேர்ப்போம்” என்று பேசியிருக்கிறார்.

Source link