T20 World Cup: "பாதிப்புகளை ஏற்படுத்தும்; சிந்தித்து முடிவெடுங்கள்" – பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்டனம்

பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி கடைசி நேரத்தில் இந்தத் தொடரில் இருந்து விலகியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

டி20 உலகக்கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்றும் இலங்​கை​யில் தொடங்​க இருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி கடைசி நேரத்தில் இந்தத் தொடரில் இருந்து விலகியது.

அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Ind vs Pak - இந்தியா vs பாகிஸ்தான்
Ind vs Pak – இந்தியா vs பாகிஸ்தான்

இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்திருக்கிறது.

பாகிஸ்தானின் இந்தப் புறக்கணிப்பிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாகிஸ்தானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான் இந்தியாவில் நடக்கும் போட்டியை இலங்கைக்கு மாற்றினோம்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு இப்படி நடந்து கொள்வது சரியல்ல.

ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று சொல்வது நியாயம் இல்லை.

இது நேர்மை மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது.

ஐசிசி
ஐசிசி

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Source link