தமிழகத்தில் நீலகிரி, தேனி, மதுரை உட்பட பல மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு அதிதீவிர கனமழை மற்றும் இடிமின்னல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு (24.10.2026 முதல் 27.10.2026 வரை) பரவலாக கனமழை முதல் அதிதீவிர கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட வாரியாக விடுக்கப்பட்டுள்ள முழுமையான மழை விபரம் இதோ:
நாள் 1 (24.10.2026) – இன்றைய மழை நிலவரம்
அதிதீவிர கனமழை : நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிதீவிர கனமழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும். மிகக் கனமழை (Heavy to Very Heavy Rain): விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கனமழை (Heavy Rain): திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாள் 2 (25.10.2026) – நாளைய மழை நிலவரம்:
அதிதீவிர கனமழை: தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மிகக் கனமழை: கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிகக் கனமழை பெய்யக்கூடும். கனமழை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
நாள் 3 (26.10.2026) – திங்கட்கிழமை மழை நிலவரம்:
மிகக் கனமழை: புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கனமழை: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாள் 4 (27.10.2026) – செவ்வாய்க்கிழமை மழை நிலவரம்:
கனமழை: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இடிமின்னல் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை
இன்று (24.10.2026) முதல் திங்கட்கிழமை (26.10.2026) வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும். இந்த காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
