TN Assembly Election | மதுரவாயல் பகுதியில் மக்களின் ஆதரவு யாருக்கு?

தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரசாரம் என தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என தற்போதைய சூழலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. நடிகர் விஜயின் த.வெ.க. கட்சி முதல் முறையாக தேர்தலை சந்திப்பதை அடுத்து அவரது கட்சி எத்தனை சதவீதம் வாக்குகளை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் மதுரவாயல் பகுதி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஜாலியாக ஒரு vox pops மாலைமலர் தரப்பில் இருந்து நடத்தப்பட்டது.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 6 பேரும், அ.தி.மு.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 5 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்று 2 பேரும், த.வெ.க.விற்கு ஓட்டு போடுவோம் என்று 24 பேரும் தெரிவித்தனர்.

Source link