TN Assembly Election 2026 LIVE Updates: த.வெ.க. உடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை

த.வெ.க. குற்றச்சாட்டுக்கு சென்னை மாநகராட்சி விளக்கம்  
 
முல்லை நகர் சந்திப்பில் சென்னை மாநகராட்சியால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை, புதிய பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவும் இல்லை; குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய, குறுகிய பரப்பில் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, அவையும் உடனடியாக நிறைவு செய்யப்பட்டது.

முல்லை நகரில் பரப்புரைக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில் திடீரென பள்ளம் தோண்டப்பட்டதாக தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதற்கு சென்னை மாநகராட்சி விளக்கம்  

தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை – அமித் ஷா
 
தமிழகத்தில் அதிமுக எங்களின் முதன்மையான கூட்டணிக் கட்சி; அக்கட்சியை ‘பெரிய அண்ணன்’ போன்றே பாஜக கருதுகிறது.

தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை; அவர் எங்களுடன் வந்தால், அது எங்கள் வாக்குவங்கியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதுகிறேன்”

– சமீபத்திய பேட்டி ஒன்றில் அமித் ஷா

  • Mar 28, 2026 07:40 IST

    திமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு

    கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை, கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Mar 28, 2026 07:40 IST

    தவெக வேட்பாளர்கள் நாளை அறிமுகம்

    234 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்களை வரும் 29ம் தேதி தனியார் நட்சத்திர விடுதியில் அறிமுகம் செய்கிறார் அக்கட்சித் தலைவர் விஜய்.

    காலை 11 மணிக்கு தாஜ் கோரமண்டலில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

  • Mar 28, 2026 07:39 IST

    ரூ. 273.71 கோடி பறிமுதல்

    தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக ரூ. 273.71 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ரூ. 44 கோடி ரொக்கம், ரூ. 116.07 கோடி மதிப்பிலுள்ள தங்கம், வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

  • Mar 28, 2026 07:38 IST

    விஜய் குற்றச்சாட்டுக்கு தேர்தல் அதிகாரி பதில்

    பெரம்பூரின் முல்லை நகர் சந்திப்பு பகுதியில் 3,000 பேர் கூட முடியாது என்பதால் மட்டுமே விஜய்யின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேறு ஒரு இடத்தினை தேர்வு செய்து அளித்தால் அனுமதி தருவது குறித்து பரிசீலனை செய்வோம்.

     – பெரம்பூர் தேர்தல் அலுவலர்

Source link