TN Assembly Election Live Updates: ஏப்ரல் 10-ந் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான முடிவுகள் வரும் மே 4-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த மார்ச் 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 

திருத்திய பிரமாண பத்திரம் தாக்கல் செய்த விஜய்

தமிழகத்தில் முதல்முறை தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூரில் மார்ச் 30-ந் தேதியும், திருச்சி கிழ்க்கில் ஏப்ரல் 2-ந் தேதியும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில் பிரமாண பத்திரத்தில் சில விபரங்கள் விடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், திருத்திய பிரமாண பத்திரத்தை விஜய் தாக்கல் செய்துள்ளார். 

ஒரே நாளில் 2000 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கிய நிலையில் அரசு விடுமுறை நாட்களை கழித்தால் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவசாகம் அளிக்கப்பட்டது. அதன்படி நாளை (ஏப்ரல் 6) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 3000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், நேற்று (ஏப்ரல் 4) ஒரே நாளில் 2000 பேர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் எம்.பிக்கள்

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. பா.ஜ.க இணைந்துள்ள என்.டி.ஏ கூட்டணியில், பா.ஜ.க 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் மத்திய இணை அமைச்சராக இருக்கும் பா.ஜ.க.வின் எல்.முருகன், அவினாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், அ.தி.மு.க.வின் சி.வி.சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார், அதேபோல் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினகராக இருக்கும் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து கடைசி நேரத்தில் பின்வாங்கினார். 

  • Apr 05, 2026 09:51 IST

    வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் – மேலூர் தொகுதி வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலூர் தொகுதி வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் 27 தொகுதி வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Apr 05, 2026 09:47 IST

    ஏப்ரல் 10-ந் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் – தேர்தல் ஆணையம் திட்டம்

    சட்டசபை தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு தகவல் தரும் சீட்டு வழங்கும் பணியை வரும் 10-ந் தேதி தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சீட்டில் வாக்குச்சாவடி பெயர், வாக்குப்பதிவு நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும். வரும் 17-ந் தேதிக்குள் இப்பணியை முடிக்க, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தபபட்டுள்ளது. 

  • Apr 05, 2026 09:43 IST

    விஜயின் பிரச்சார வாகன மதிப்பு பிரசார கேரவன் மதிப்பு ரூ.6 கோடியே 25 ஆயிரம்

    பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த விஜய், இதில், பிரசார கேரவன் குறித்த விவரத்தை சேர்த்துள்ளார். அதில், விஜய்யின் பிரசார கேரவன், அவர் பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளது. பிரசார கேரவன் மதிப்பு ரூ.6 கோடியே 25 ஆயிரம். கேரவனுடன் சேர்த்து விஜய்யின் அசையும் சொத்து மதிப்பு ரூ.410 கோடி என பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Apr 05, 2026 09:13 IST

    ஈஸ்டர் தின வாழ்த்துக்கள் சொன்ன மோடி, விஜய்

    ஈஸ்டர் நம்பிக்கை, புதுப்பித்தலை கொண்டாடுகிறது, அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சியை கொண்டுவரட்டும். கிறிஸ்துவின் போதனைகள் சமூகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்தும் எனபிரதமர் மோடி ஈஸ்டர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் த.வெ.க தலைவர் விஜய், அனைவரிடமும் அன்பு, சமாதானம், கருணை, மனித நேயம் நிலைக்கட்டும், ஈஸ்டர் கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

  • Apr 05, 2026 08:53 IST

    மக்களின் தேவை அறிந்து தவெ.க ஆட்சி அமைந்ததும் அதை நிறைவேற்றுவோம் – புஸ்ஸி ஆனந்த்

    சென்னை தியாகராயநகர் தொகுதியில் த.வெ.க சார்பில் போட்டியிடும் புஸ்ஸி ஆனந்த், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், உங்களை யார் எதிர்த்து போட்டியிடுகிறார்கள் என்று நான் பார்க்கவில்லை. தலைவர் விஜய் தி.நகரில் போட்டியிட எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார். அவரின் முகத்திற்காகவும், எங்கள் திட்டங்களுக்காகவும், எங்கள் வெற்றி வாய்ப்பு இந்த தொகுதியில் இருக்கும். நான் வெளியில் இருந்து வந்திருக்கிறேன் என்பது பெரியது அல்ல, யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பது தான் முக்கியம். கண்டிப்பாக இந்த தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். மக்களின் தேவை அறிந்து தவெ.க ஆட்சி அமைந்ததும் அதை நிறைவேற்றுவோம் என்று கூறியுள்ளார்.

  • Apr 05, 2026 08:14 IST

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – வாக்குறுதி அளித்த காங்கிரஸ்

    புதுச்சேரியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகள் மூலம் ரூ2500 மதிப்புள்ள, மளிகை பொருட்கள் வழங்கப்படும், தாளிக்கு தங்கம் வழக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 2029-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வரும்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

  • Apr 05, 2026 08:10 IST

    சட்டசபை தேர்தல் – அமித் ஷா, ராகுல்காந்தி நாளை சென்னை வருகை

    மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வரும் நிலையில், அமித்ஷா புதுச்சேரி செல்லும் நிலையில், ராகுல் காந்தி சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

  • Apr 05, 2026 07:33 IST

    ஜி.கே.வாசன், நாளை முதல் என்.டி.ஏ. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

    தமிழக சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ள த.மா.க கட்சியில் தலைவர் ஜி.கே.வாசன், நாளை முதல் என்.டி.ஏ. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை கும்பகோணத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் வாசன், ஏப்ரல் 21-ந் தேதி சென்னையில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

Source link