தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற நிலையில், மார்ச் 30-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனிடையே அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோடி சென்னை வருகை
புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் பிரதமர் இன்று மாலை புதுச்சேரி அஜந்தா சிக்னல் சந்திப்பு-அண்ணா சாலை வரை 1.7 கி.மீ.க்கு சாலை வலம் செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி புதுச்சேரியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுளளது. இன்று மாலை மீண்டும் சென்னை திரும்பும் பிரதமர் மோடி கிண்டி நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்குகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
விஜய் வேட்புமனுக்களால் கிளம்பிய சர்ச்சை
பெரம்பூர் தொகுதி வேட்புமனுவில் குற்ற வழக்கு இல்லையென த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார். திருச்சி கிழக்கிற்கான வேட்புமனுவில் பெரம்பூர் பரப்புரையின்போது மார்ச் 30) ஒரு வழக்கும், 2025 ஆகஸ்ட் மாதத்தில் மதுரை மாநாடு தொடர்பான ஒரு வழக்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சி.எஸ்.கே – பஞ்சாப் மோதல்
ஐ.பி.எல் தொடரில் சென்னையில் இன்று (ஏப்.3) பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் தோல்வியுற்ற சென்னைஅணி வெற்றி பெற வேண்டுமென உள்ளூர் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.
-
Apr 03, 2026 08:12 IST
கேரளம், புதுச்சேரியில் பிரதமர் மோடி பரப்புரை
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும்(ஏப்.3,4) பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்கிறார். இன்று தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி பயணம் செய்கிறார்.
புதுச்சேரியில் அஜந்தா சிக்னல் சந்திப்பு, அண்ணா சாலை, அண்ணா திடல் பகுதிகளில் ரோடு ஷோ சென்று பிரதமர் பரப்புரை மேற்கொள்கிறார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கும் பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை(ஏப்.4) கேரளம் செல்லும் பிரதமர் மோடி, சட்டமன்றத் தேர்தல் பரப்புரை பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுகிறார்கள்
-
Apr 03, 2026 08:05 IST
இன்று பா.ஜ.க மையக்குழு கூட்டம்
வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய சென்னை கமலாலயத்தில் இன்று பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடக்கிறது இன்று காலை நடைபெற உள்ளது. இந்தக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொள்கிறார்
-
Apr 03, 2026 07:58 IST
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – செல்வப்பெருந்தகை கொடுத்த அப்டேட்
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தி.மு.க கூட்டணியில் 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்த காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு (CEC) கூட்டம் டெல்லியில் நேற்று இரவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
Apr 03, 2026 07:57 IST
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையப் பக்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.
