தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்குகிறது.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.
2026 சட்டசபை தேர்தலுக்கான 20-க்கு மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள தி.மு.க. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்த நிலையில், நேற்று (மார்ச் 29) தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், உள்ளிட்டோருக்கான திட்டங்கள், பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
த.வெ.க வேட்பாளர்கள் பட்டியல்
2026 சட்டசபை தேர்தலை முதல்முறையாக சந்திக்கும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூர் தொகுதியில், ஆர்.டி.சேகர், திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜ் ஆகியோர் விஜய்க்கு எதிராக தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர். மேலும், ஸ்டாலினின் கொளத்தூர், உதயநிதியின் சேப்பாக்கம், மதுரை மத்தியம், கோவை தெற்கு, உள்ளிட்ட சில தொகுதிகளில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் த.வெ.க கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.
10 ஆண்டுக்கு பின் மீண்டும் சட்டசபை தேர்தலில் திருமாவளவன்
கடந்த 2016-ம் ஆண்டு காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியி்ட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த வி.சி.க தலைவர் திருமாவளன், 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார். ஏற்கனவே சிதம்பரம் தொகுதியில் எம்.பியாக இருக்கும் அவர் தற்போது சட்டசபை தேர்தலிலும் போட்டியிடுகிறார். வி.சி.க தி.மு.க. கூட்டணியில் 6 தனி தொகுதி மற்றும் 2 பொதுத்தொகுதி என 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
-
Mar 30, 2026 07:33 IST
4 நாட்கள் விடுமுறை, 4 நாள் தான் அவகாசம் – சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 30) தொடங்குகிறது. காலை 11 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், வேட்பாளாகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ, வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 7-ந் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில், 4 நாட்கள் விடுமுறை என்பதால், ஏப்ரல் 6-ந் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4 நாட்கள் மட்டும் தான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
