தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கியது. அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெல்லப்போவது தி.மு.க. டீம் தான்
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தி.மு.க. உதயநிதி ஸ்டாலின், வேலூரில் பேசியபோது, இன்றைக்கு பா.ஜ.க., ஏ.பி.சி என்று பட டீம்களை இறக்கி இருக்கிறார்கள். எத்தனை டீம் வந்தாலும் வெல்லப்போவது நம்ம தி.மு.க. டீம் தான். நம்மதான் மீண்டும் சாம்பியன் என்று பேசியுள்ளார்.
திருத்தணியில் பரப்புரை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், நேற்று (ஏப்ரல் 1) திருத்தணியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த், திருத்தணி முருகனை நேரில் சந்தித்து, வெற்றிவேலை அவரது பாதத்தில் வைத்து, கும்பிட்டு பரப்புரைக்கு வந்துள்ளேன் என்று கூறி, திருத்தணி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி – ம.தி.மு.க
தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் ம.தி.முக. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம், சீர்காழி தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், திடீர் முடிவாக 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அவரது முடிவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
-
Apr 02, 2026 07:59 IST
தேர்தலில் போட்டியிட அண்ணாமலை மறுப்பு?
பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை வெளியாகாத நிலையில், தேர்தலில் போட்டியிட கோவை வடக்கு தொகுதி கிடைக்காததால், பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலில் களமிறங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சி வலியுறுத்தியும் அதை ஏற்க மறுத்த அண்ணாமலை, பரப்புரை மட்டும் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
Apr 02, 2026 07:56 IST
ஈரோடு மற்றும் கோவையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று காலை 9 மணிக்கு ஈரோட்டில் உள்ள சித்தோடு பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு, கோவை கொடிசியா மைதானத்தில் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார்
-
Apr 02, 2026 07:55 IST
திருச்சி கிழக்கில் இன்று விஜய் தேர்தல் பிரச்சாரம்
தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில், கடந்த மார்ச் 30-ந் தேதி பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய், பிற்பகலில் அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் யாரும் தனது வாகனத்தை பின்தொடர வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
