TN Assembly Election Live Updates: வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் மு.க.ஸ்டாலின், சீமான் மற்றும் விஜய் ஆகிய 3 முதல்வர் வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

வீட்டில் இருந்தே வாக்களிக்க வசதி – தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பை `இந்தியத் தேர்தல் ஆணையம்(ECI)’ வெளியிட்டுள்ளது. அதன்படி, 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் `மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951′ பிரிவு 60(c) படி தபால் வாக்கு மூலம் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை பெறலாம். இதுவரை 2.37 லட்சம் வாக்காளர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அசாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரப்புரையில் விதி மீறல் – த.வெ.க விஜய் மீது வழக்குப்பதிவு

முதல்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் த.வெ.க தலைவர் விஜய், நேற்று (மார்ச் 30) பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இந்த பிரச்சாரத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் பாதையை மறைத்ததாக குற்றச்சாட்டு, தேர்தல் நடத்தை விதி மீறல், 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களை திரட்டியதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரில் 5 பிரிவுகளில் சென்னை பெரவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ராமதாஸ் பா.ம.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

சட்டசபை தேர்தலுக்கான அய்யா பா.ம.க. என புதிய கட்சியை தொடங்கியுள்ள டாக்டர் ராமதாஸ் 5 தொகுதிகளுக்கான வேட்பாளகளை அறிவித்துள்ளார். அதன்படி, சேலம் மேற்கு அருள், கும்பகோணம் ம.க.ஸ்டாலின், விருத்தாச்சலம் சுரேஷ், வந்தவாசி (தனி) முரளி சங்கர், மயிலாடுதுறை சக்திவேல் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

Source link