TN Assembly Elections 2026 LIVE Updates: கன்னியாகுமரியில் இன்று விஜய் தீவிர வாக்குச் சேகரிப்பு- பரப்புரை வாகனத்தைப் பின்தொடரத் தடை

இ.பி.எஸ்-க்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் புகார்: புகழேந்தி காட்டம்

எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய அறிக்கை குறித்து, புரட்சி அதிமுகவின் நிறுவனர் மற்றும் தலைவர் புகழேந்தி கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கக் கோரி, 1954-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் நாங்கள் புகார் அளித்துள்ளோம். அவர் பிரசாரம் மேற்கொள்ள அனுமதித்தால், திமுக மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு, அது கலவரமாக மாற அதிக வாய்ப்புள்ளது.

எனவே, தேர்தல் ஆணையம் அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அவரது பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஒருவேளை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். எங்களிடம் போதுமான ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகள் குறித்த பதிவுகள் உள்ளன. தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றமே இறுதி முடிவை எடுக்கட்டும்.

Video: ANI

  • Apr 12, 2026 07:39 IST

    கன்னியாகுமரியில் இன்று விஜய் தீவிர வாக்குச் சேகரிப்பு

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுக்க உள்ளார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெறப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இன்று மதியம் 2 மணி அளவில், மகாதானபுரம் ஜங்ஷன் முதல் ஜீரோ பாயிண்ட் வரை வாகனத்தில் சென்றபடி விஜய் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவுள்ளார். இந்தப் பயணத்திற்காகத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கட்சி நிர்வாகிகள் முன்னெடுத்துள்ளனர்.

  • Apr 12, 2026 07:38 IST

    தொண்டர்களுக்கான முக்கிய கட்டுப்பாடுகள்:

    தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்குக் கழகத் தலைமை சார்பில் சில முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன: 

    தலைவரின் பரப்புரை வாகனத்தை இருசக்கர வாகனங்களோ அல்லது இதர வாகனங்களோ பின்தொடரக் கண்டிப்பாக அனுமதி இல்லை. வெயிலின் தாக்கம் மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நேரில் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக இந்தப் பரப்புரை நிகழ்வுகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படவுள்ளன.

    தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, அமைதியான முறையில் இந்த நிகழ்வு நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  • Apr 12, 2026 07:37 IST

    திருமாவளவன் எங்கள் சகோதரர் போன்றவர்: அவமதிப்பு புகார்களுக்குப் பிரேமலதா விஜயகாந்த் முற்றுப்புள்ளி

    வெளிச்சம் டிவி ஆரம்பித்தபோது அதனைத் திறந்து வைத்தது கேப்டன். மக்கள் நலக் கூட்டணியின் போது, எங்கள் சகோதரர் மாதிரி எங்களுடன் பழகி இருக்கிறார். அண்ணன் திருமாவளவன் எனக்காகப் பரப்புரைக்கு விருத்தாச்சலம் வருகிறார். எங்களுக்குள் நல்ல நட்பும், புரிதலும் இருக்கிறது. தவறாகப் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

    கடலூர் பொதுக்கூட்டத்தில் திருமாவளவனை, பிரேமலதா அவமதித்தார் எனச் சமூக வலைதளங்களில் செய்தி பரவும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

  • Apr 12, 2026 07:37 IST

    கனிமொழியின் தேர்தல் பரப்புரை வாகனத்தில் ஏறி பெண் போராட்டம்

    ஆலங்குளத்தில் திமுக எம்.பி. கனிமொழி பரப்புரை வாகனத்தில் ஏறிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

    பனை தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் போராடியவர்கள் மீது வழக்கு பதிந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் பதியப்பட்ட 226 பேரில் ஒருவரான, தற்போது சஸ்பெண்டில் உள்ள காவலர் பிரபாகரனின் மனைவி பிளஸ்சி என்பவர் கனிமொழி வாகனத்தில் ஏறினார். கனிமொழி அவரைச் சமாதானப்படுத்தினார்.

    Video: PT TV



Source link