TN Assembly Elections Live Updates: தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.தான் ஒரே வழி – செங்கோட்டையன்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை, வேட்புமனுவை திரும்ப பெறும் காலம் என அனைத்தும் முடிந்துவிட்டது. தற்போது அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி வாழ்க்கை இதுதான் – ஸ்டாலின் விமர்சனம்

தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், தூத்துக்குடி பிரச்சாரத்தில் பேசிய அவர், காலில் விழு, காலை வாரு, அடுத்த காலைத் தொடு, இவ்வளவு தான் இ.பி.எஸ் அரசியல் வாழ்க்கை. எடப்பாடி பழனிச்சாமியின் மொத்த அரசியல் வாழ்க்கையும் இந்த 3-ல் அடங்கிவிடும் என்று பேசியுள்ளார். 

தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.தான் ஒரே வழி – செங்கோட்டையன்

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் த.வெ.க வேட்பாளராக ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட கே.ஏ.செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி 10 முறை தோல்வியை கண்ட பழனிச்சாமி, அவரால் திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்த முடியாது. அவருக்கு போடும் ஓட்டு நோட்டாவுக்கு போடுவதற்கு சமம். ஆகவே நலலாட்சி, சிறந்த ஆட்சியை தமிழகத்தில் அமைவதற்கு, நீங்கள் அனைவரும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

இயல்பு நிலைக்கு திரும்பிய ராமதாஸ்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான அய்யா பா.ம.க என்ற புதிய கட்சியை தொடங்கி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து டாக்டர் ராமதாஸ் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் முடிந்து வெளியே வந்த அவர், திடீரென மயங்கி விழுந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை அளவு குறைந்ததால் ராமதாஸ்க்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அவர் இயல்பு நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

  • Apr 13, 2026 07:37 IST

    அரசியல் தலைவர்கள் பிரச்சார அப்டேட்

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 
    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை 3 மணிக்கு திருச்சி, மாலை 5 மணிக்கு திண்டுக்கல் ஆகிய 2 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். 
    அகில இந்திய பா.ஜ.க. தலைவர் நிதின் நபின் காலை 11.30 மணிக்கு அறந்தாங்கி, மாலை 5 மணிக்கு கந்தர்வகோட்டை, மாலை 6 மணிக்கு தஞ்சாவூர் ஆகிய 3 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். 
    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காலை 9 மணிக்கு திண்டுக்கல், 10.30 மணிக்கு மதுரை, மாலை 5 மணிக்கு ஒத்தக்கடை, இரவு 7 மணிக்கு சோழவந்தான் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

Source link