ஈரோடு:
ஈரோட்டில் இன்று பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:-
காலிங்கராயன் வாய்க்கால் மாநகர எல்லை பகுதியில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க பேபி வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. அது சீராக இல்லாததால் தண்ணீர் வீணாகாமல் கழிவு நீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
காலிங்கராயன் தொடி பாலம் 750ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது, கற்களால் கொண்டு கட்டப்பட்டது. தொடர்ந்து அந்த பாலத்தில் சென்றால் பிரச்சனை ஏற்படும் என்ற அடிப்படையில் வேறு பாலம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். தொட்டி பாலம் அருகில் மாற்று பாலம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லவும் அந்த பழமையான பாலம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கவும் ஆய்வு செய்து வருகிறோம்.
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் வகையில் பாட்டிலுக்கு லேப்லேல் ஓட்டுவதற்கு கம்பெனி நிறுவனத்திடம் கேட்டு உள்ளோம். அதற்கு நிறுவனத்தின் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. தனியார் ஏஜென்சி இடம் கொடுக்கப்பட இருக்கிறது. இது தொடர்ந்து சுழற்சி முறையில் நடைபெறக்கூடிய பணிகள் இருந்தால் ஏஜென்சியிடம் கொடுக்கலாம். இது ஒரு புதுவிதமான வேலை என்பதால் கொடுக்கும் போது நமக்கும் நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது. வெறுப்பவர்களும் தெளிவாக பண்ண வேண்டும். அதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மிக விரைவில் செய்யப்படும். அதே நேரத்தில் பணியாளர்கள் சுமையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மே 31ம் தேதி வரை நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்து இருக்கிறது. அதற்குள் காலி மதுபாட்டில்களை அமுல்படுத்த எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படுமோ அதனை எடுப்போம்.
பெண்களை தி.மு.க ஆட்சியில் பாதுகாத்து இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை பிரச்சனைகள், நிதி பிரச்சனைகள் முதற்கொண்டு அரசாங்கம் முழு பொறுப்பையும் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
தி.மு.க.வுக்கு இன்றைக்கும் இல்லாத அளவிற்கு கடந்த நான்காண்டுகளாக பெண்கள் செல்வாக்கை முழுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று இருக்கிறார்.
தி.மு.க ரஜினியை மிரட்டுகிறது என்று ரஜினி தான் சொல்ல வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைந்தால் தி.மு.கவுக்கு பாதிப்பு வருமா? என்ற கேள்விக்கு,
தி.மு.க என்ன மாதிரியான சூழல் இருந்தாலும் விஜயை சந்திக்கும் வலுவோடு இருக்கிறது. எப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டாலும் அந்த சூழ்நிலை எதிர்கொள்ளும் வலு தி.மு.க கூட்டணிக்கு இருக்கிறது. 5 ஆண்டு காலமாக செய்த மக்கள் பணியை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
கடந்த பாராளுமன்ற உள்ளாட்சி இடைத்தேர்தல் போன்றவை விட சட்டமன்ற தேர்தல் பெரிய வெற்றியாக வரும்.
கொலை சம்பவங்களை மறைப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசி அமைச்சர் முத்துசாமி,
கொலை சம்பவங்களை எப்படி மறைக்க முடியும். அதிகளவு வரக்கூடிய அனைத்து வழக்குகளையும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கூடிய ஆட்சியாக தி.மு.க ஆட்சி உள்ளது. அதே நேரத்தில் வழக்கு வருவது குறித்தும் நடவடிக்கை எடுப்பது முக்கியம்தான்.
போதைப்பொருள் தான் காரணம் என்று வைத்துக்கொண்டால் தி.மு.க அரசு வந்தவுடன் தடுத்து இருந்தால் அதுவும் தவறாகி விடும், போதைப் பழக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களை வெளியே கொண்டு வர வேண்டும். படிப்படியாகத்தான் பண்ண முடியும். ஒரே நாளில் மதுக்கடைகள் மூடினால் வேறு மாதிரி சென்று விடும். ஏற்கனவே படிப்படியாக 500 கடைகள் மூடப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக எந்த ஒரு புது கடையும் இதுவரை வரவில்லை.
தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் குறித்து கமல்ஹாசன் அறிக்கைக்கு பதில் தெரிவித்து முத்துசாமி கூறும் போது, கமல்ஹாசன் ஏதாவது செய்தி அடிப்படையில் இதை சொல்லி இருக்கலாம். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார். வழக்குகள் அதிகமாக பதிவு செய்வதால் குற்றமில்லை,கடந்த முறை விட இந்த முறை பாலியல் குற்றங்கள் குறைந்து இருப்பதாக உள்துறை செயலாளர் சொல்லி இருக்கிறார்.
தேர்தலில் திமுக அரசு செய்துள்ள அனைத்து திட்டங்கள் அனைத்தும் மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆட்சியில் அமர்த்தும் என்றார்.
