ரஞ்சிக் கோப்பை 2026 தொடரின் லீக் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் லீக் போட்டியில், தமிழ்நாடு அணியும், உத்தரகாண்ட் அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
உத்தரகாண்ட் அணி இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய உத்தரகாண்ட் அணியில், டாப் ஆர்டர் பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள். இதனால், அந்த அணி, ஒரு கட்டத்தில், 44/6 என படுமோசமாக சொதப்பியது. இதனைத் தொடர்ந்து, அவ்னிஷ் சுதா மற்றும் மயங்க் மிஸ்ரா ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை, சரிவு பாதையில் இருந்து மீட்டனர்.
இந்நிலையில், அவ்னிஷ் துபா 103 பந்தில் 54 ரன்களையும், மயங்க் மிஸ்ரா 114 பந்துகளில் 33 ரன்களையும் அடித்து அவுட் ஆனார்கள். இறுதியில், உத்தரகாண்ட் அணி, முதல் இன்னிங்ஸில் 134/10 ரன்களை மட்டும் அடித்து சொதப்பியது.
சாய் கிஷோர், சிறப்பாக பந்துவீசி, 18 ஓவர்களில் 40 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். குர்ஜாப்னித் சிங், 13 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.
தமிழ்நாடு இன்னிங்ஸ்: அடுத்து, முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய தமிழ்நாடு அணியில், ஓபனர், விமல் குமார் 0 (4) டக்அவுட் ஆன நிலையில், மற்றொரு ஓபனர் ஜெயதீசன் 53 பந்தில் 37 ரன்களை எடுத்தார். இப்படி, இரண்டு பேட்டர்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அடுத்து, பிரதோஷ் பௌல் மற்றும் இந்திரஜித் இருவரும் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு, பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
இதில், பிரதோஷ் பௌல் 279 பந்துகளில் 12 பவுண்டரி உட்பட 136 ரன்களை குவித்து அசத்திய நிலையில், இந்திரஜித் 217 பந்துகலளில் 77 ரன்களை சேர்த்தார். இப்படி, இருவரும் சிறப்பாக செயல்பட்டதால், தமிழ்நாடு அணி, 64/2 என்பதில் இருந்து 235/3 ரன்கள் என்ற நிலையை எட்டியது.
அவ்வளவுதான், இப்படி இருவரும் சிறப்பாக செயல்பட்ட பிறகு, மற்ற பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால், தமிழ்நாடு அணி, 313/10 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி, 179 ரன்கள் முன்னிலை பெற்றது.
உத்தரகாண்ட் அணியில், மயங்க் மிஸ்ரா அபாரமாக பந்துவீசி, 37 ஓவர்களில் 118 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும், அவ்னீஷ் சுதா, 20 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார். இப்படி, இரண்டே பௌலர்கள் இணைந்து, தமிழ்நாடு அணி பேட்டர்களை திணறடித்தார்கள்.
இந்நிலையில், 179 ரன்கள் பின்தங்கியதுடன், இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய உத்தரகாண்ட் அணி, 9 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில், 2ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்னிங்ஸ் வெற்றியைப் பெறுமா? உத்தரகாண்ட் அணி, தற்போதுவரை 170 ரன்கள் பின்தங்கியுள்ளது. முதல் இன்னிங்ஸில், உத்தரகாண்ட் அணியால், 134 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் உத்தரகாண்ட் அணி, இன்னமும் 170 ரன்களை அடித்து, மீண்டும் தமிழ்நாடு அணிக்கு இலக்கை நிர்ணயிப்பது கடினம் எனக் கருதப்படுகிறது.
