Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் – கின்னஸ் விருது வென்று சாதனை!

மிஷின் இம்பாசிபல் படங்களின் 8வது மற்றும் கடைசி பாகமான The Final Reckoning படத்திற்காக 62 வயதிலும் கடுமையான உழைப்பைச் செலுத்தியிருக்கிறார் Tom Cruise.

Tom Cruise

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆபத்தான சாகச காட்சிகள் நடிப்பது புதிதானதல்ல. அதற்கு சாட்சியாக கின்னஸ் உலக சாதனை கௌரவம் கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான Mission: Impossible – The Final Reckoning திரைப்பட ஷூட்டிங்கின்போது, 16 முறை ஹெலிகாப்டரில் இருந்து எரியும் பாராசூட்டுடன் குதித்திருக்கிறார் டாம் க்ரூஸ்.

Mission: Impossible
Mission: Impossible

இந்த சாகசத்துக்காக எரியும் பாராச்சூட்டுடன் அதிகமுறை குதித்த நபர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.

டாம் க்ரூஸ் அவரது தைரியமான ஸ்டண்ட்களுக்காக அறியப்படுபவர். மிஷின் இம்பாசிபல் படங்களின் 8வது மற்றும் கடைசி பாகமான Mission: Impossible – The Final Reckoning படத்திற்காக 62 வயதிலும் கடுமையான உழைப்பைச் செலுத்தியிருக்கிறார் டாம் க்ரூஸ்.

Tom Cruise செய்த ஸ்டண்ட்

கின்னஸ் சாதனை பெற்ற காட்சியானது தென்னாப்பிரிக்காவில் உள்ள டிராகன்ஸ்பெர்க் என்ற இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒருவார காலம் டாம் க்ரூஸும் அவரது குழுவினரும் பயிற்சிகள் மேற்கொண்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஒவ்வொருமுறையும் 7500 அடி உயரத்தில் இருந்து டாம் க்ரூஸ் பறக்க வேண்டியிருந்ததாம்.

டாம் க்ரூஸ்
டாம் க்ரூஸ்

குதித்த பிறகு எரிபொருளில் நனைக்கப்பட்ட பாராசூட்டை பற்ற வைக்க வேண்டும். அது முறுக்கிக்கொண்டுவிட்டால் டாம் க்ரூஸையும் சேர்த்து எரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது எத்தனை ஆபத்தானது என்பதை இந்த வீடியோவில் புரிந்துகொள்ளலாம்.

கின்னஸ் உலக சாதனைகளின் தலைமை ஆசிரியர் கிரெய்க் கிளென்டே, “டாம் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கவில்லை, அவரே ஒரு ஆக்‌ஷன் ஹீரோதான். உறுதியாகவும் அச்சமில்லாமலும் இருப்பதில் அவர் செலுத்தும் கவனம், நம்மை வியக்கவைக்கிறது” எனப் புகழ்ந்துள்ளார்.

மிஷன் இம்பாசிபல் 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு உளவாளியைப் பற்றிய கதை. The Final Reckoning திரைப்படன் இதன் இறுதி அத்தியாயமாக அமைந்திருக்கிறது. முதல் படம் முதல் இன்றுவரை டாம் க்ரூஸ் அச்சமில்லாமல் ஸ்டண்ட்களில் ஈடுபடுவது பார்வையாளர்களுக்கு நம்பமுடியாத ஆச்சரியத்தை அளிக்கிறது.

Source link