TVK: சேலம் மேடைக்கு வந்த விஜய்; தொடங்கியது தவெக நிர்வாகிகள் கூட்டம்!

சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெறுகிறது.

தவெக விஜய்
Just Now

அரசியலுக்கு வந்தது தப்பா? – தவெக விஜய் 

தைரியம்தான் எல்லாத்துக்கும் அடிப்படை. நம்மை குறைத்து மதிப்பிடும்போதுதான் நம்மை யார் என நிரூபித்துக் காண்பிப்பதற்கான உத்வேகம் பிறக்கும்.

விஜய்யே வீட்டை விட்டு வெளியே வா…பனையூரை விட்டு வெளியே வா என்கிறார்கள். என்னுடைய வீடு எங்கே இருக்கிறது தெரியுமா? இந்த தமிழ்நாடு மற்றவர்களுக்குதான் மாநிலம்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தமிழ்நாடு எனக்கு ஒரு வீடு. என் வீட்டில் 8 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள்

நான் உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கேன். இந்த விஜய் என்னங்க தப்பு பண்ணான். தன்னை நேசிச்ச மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தப்பா? நான் போய் மக்களை சந்திக்க உரிய இடம் கூட கொடுக்கமாட்டாங்க. இது என்னங்க நியாயங்க?

58 mins ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை தவெக விஜய் நடத்தி வருகிறார். கடந்த 2ஆம் தேதி பனையூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார்.

தவெக விஜய்
தவெக விஜய்

இந்நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப்.13) தவெக நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெறுகிறது. திறந்தவெளி பொதுக் கூட்டமாக நடைபெறும் இதில் 5,000 பேர் பங்கேற்று இருக்கின்றனர். மேடைக்கு வந்தடைந்த விஜய் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற இருக்கிறார்.

Source link