Vaibhav Sooryavanshi – மூன்று பார்மெட்டிலும் ஆடப் போகும் சூர்யவன்ஷி: அதுவும், இனி புது ரோலில் ஆட உள்ளார் – bcci decided vaibhav sooryavanshi to play all three format in india team

ஐபிஎல் 2026 சீசனில் தொடர்ச்சியாக காட்டடி அடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு, உடனே இந்திய டி20 அணியில் இடம் வழங்கப்பட்டது. முதலில், இங்கிலாந்து டி20 தொடரில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, அதில் ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக தொடர்ச்சியாக தடுமாறி, விக்கெட்டை இழந்தார். இத்தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2 அரை சதங்களை அடித்து அசத்தினார். இப்படி, ஜிம்பாப்வே தொடரில் அதிரடி காட்டி, ஓபனர் இடத்தை சூர்யவன்ஷி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

பிசிசிஐ முடிவு: இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷியை விரைவில் இந்திய ஒருநாள் அணியிலும், இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாட வைப்பது குறித்து பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜிம்பாப்வே டி20 தொடர் முடிந்தப் பிறகு, பிசிசிஐ நிர்வாகிகள், தேர்வுக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது பேசிய பிசிசிஐ நிர்வாகி, ‘‘டெஸ்டில், இனி புது ரோலை உருவாக்க வேண்டும். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் செய்வதை பாருங்கள். பேட்டிங்கும் ஆடுகிறார். தேவைப்படும் நேரத்தில், பார்ட் டைம் ஸ்பின்னராக இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு வீரர் இந்திய டெஸ்ட் அணியிலும் தேவை. அப்படியொரு வீரராக வைபவ் சூர்யவன்ஷியை உருவாக்க வேண்டும்’’ என பிசிசிஐ நிர்வாகி பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பேசிய அந்த பிசிசிஐ நிர்வாகி, ‘‘ஒருநாள் பார்மெட்டிலும், சூர்யவன்ஷி, பார்ட் டைம் பௌலராக இருந்தால், அது மிகவும் உதவிக்கரமாக இருக்கும். இனி, டாப் ஆர்டரில் பந்துவீச தெரிந்த பேட்டர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் ஆடும் இடத்தில், ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரே போதுமானதாக இருக்கும்’’ என அவர் ஆலோசனை தெரிவித்துள்ளாராம்.

இதனால், இனி இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளில், பந்துவீச தெரிந்த டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேர்வுக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். மேலும், சூர்யவன்ஷியின் பந்துவீச்சு திறமையை விரைவில் பரிசோத்துவிட்டு, டெஸ்ட் அணியிலும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கு பிறகு, சூர்யவன்ஷிக்கு ரெகுலராக ஓபனர் இடத்தை கொடுக்க உள்ளார்களாம். இதனால், டெஸ்ட் பார்மெட்டில், யாஷஸ்வி ஜெய்ஷ்வாலுக்கு இனி இடம் கிடைக்காது எனக் கருதப்படுகிறது.

என்ன காரணம்? இந்திய அணிக்கு தோனி கேப்டனாக இருந்தவரை, டாப் ஆர்டர் பேட்டர்கள் விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் போன்ற சில ஓவர்களை வீசினார்கள். இதனால், இந்திய அணிக்கு ஒரேயொரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இருந்தார். ஆனால், தற்போது டாப் ஆர்டரில் எந்த பேட்டர்களும் பந்துவீசாத காரணத்தினால், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகிய இரண்டு ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் விளையாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும், இரண்டு பேரும் ஆல்ரவுண்டர்களாக இருப்பதால், முழுநேர ஸ்பின்னரை சேர்க்க முடியாத நிலைமையும் ஏற்படுகிறது. இதே, டாப் ஆர்டரில் ஒரு பார்ட் டைம் பௌலர் இருந்தால், ஒரு முழுநேர ஸ்பின்னரை தைரியமாக சேர்க்க முடியும். இது அணிக்கு நல்ல பலனை கொடுக்கும் என்பதால்தான், பிசிசிஐ தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

Source link