Venus Debilitation In Virgo,கன்னி ராசியில் நீசம் அடையும் சுக்கிரன்: 5 ராசிகளுக்கு தொழில் மற்றும் திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஜோதிட பலன்கள் – venus debilitated in virgo: astrological effects on career and married life for 5 zodiac signs

திருமண சுகம், செல்வம், வசதிகளை தரக்கூடிய சுக்கிர பகவான் 2026 ஆகஸ்ட் 1ம் தேதி சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இந்த ராசியில் சுக்கிரன் தன்னுடைய குறைவான பலனை தரக்கூடிய நீச நிலையை அடைய உள்ளார். கிரகமான சுக்கிரன் நீசநிலையை அடையும் போது அவரின் தாக்கம் குறைய தொடங்கும். இருப்பினும் சில ராசிகளுக்கு இந்த நிலையானது மிகவும் சாதகமான பலனை தரக்கூடியதாக அமையும். இந்த விசியத்தில் அற்புத பலனை பெறவில்லை இங்கு தெரிந்து கொள்வோம்.

சுக்கிரன் பெயர்ச்சி
ஆகஸ்ட் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழையுகிறார். இந்த ராசியில் சுக்கிரன் பலவீனமான நீச நிலையில் இருந்தாலும், பல ராசிகளுக்கு நன்மைகளை வழங்க கூடியவராக இருப்பார். அந்த விதத்தில் சுக்கிரனின் அமைப்பு தரக்கூடிய நன்மைகள், குடும்பத்தில், மகிழ்ச்சி, தொழிலில் வெற்றி உள்ளிட்டவற்றை அனுபவிக்க போகும் ராசிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2026

ரிஷப ராசி அதிபதி ஆன சுக்கிரன் கன்னி ராசியில் நீச நிலை அடைய உள்ளார். உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அவருடைய சஞ்சாரம், உங்களுடைய செயல்பாடுகளால் புதிய சாதனைகளை படைக்க வாய்ப்புகள் உண்டு. இந்த காலத்தில் உங்களின் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் பணியிடத்திலும் உங்களுடைய சூழல் நேர்மறையான மாற்றங்களை காணத் தொடங்கும். பிள்ளை பாக்கியத்திற்காக காத்திருக்க கூடிய தம்பதிகளுக்கு அவர்களின் விருப்பம் நிறைவேறக்கூடியதாக அமையும். திருமண முயற்சியில் இருக்கக்கூடிய நபர்களுக்கு நல்ல வரன் அமையும். இந்த காலத்தில் மாணவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். படிப்பில் வெற்றி பெறுவார்கள்.
பரிகாரம்:

சுக்கிரனின் நன்மைகளைப் பெற தினமும் ‘ஓம் ட்ராம் ட்ரீம் ட்ரௌம் ஸஹ சுக்ராய நமஹ’ (Om Dram Drim Droum Sah Shukray Namah) என்ற மந்திரத்தை முத்திருப்பதன் மூலம், சுக்கிர கிரகத்தின் பலத்தை அதிகரிக்கும்.

மிதுன ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2026

மிதுன ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு சுக்கிரன், உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இதனால், மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். இந்த காலத்தில் உங்கள் உறவினர்களின் அன்பு கிடைக்கும். அவர்களுடன் நேரம் செலவிடவும் ஆலோசனை கிடைக்கவும் வாய்ப்புகளும் உண்டு. புதிய வண்டி, வாகனம், வீடு போன்ற சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்களிடம் உங்களுக்கு செல்வாக்கு கிடைக்கும். மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவீர்கள்.
பரிகாரம்:

சுக்கிரனின் அருளைப் பெற, வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்குத் தாமரை மலர் சமர்ப்பித்து அல்லது வெள்ளை நிற இனிப்புகளைப் படைத்து வழிபாடு செய்யவும்.

விருச்சிகம் ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2026

விருச்சிக ராசி நண்பர்களுக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி நடக்க உள்ளது. அவருடைய சஞ்சாரம் காரணமாக உங்களுடைய கடின உழைப்பிற்கான தகுந்த பலன் கிடைக்கவும், பாராட்டு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் காண தொடங்குவீர்கள். நீங்கள் ஏதேனும் தொழில் அல்லது வேலை செய்யக்கூடியவராக இருந்தால் உங்களுடைய பணியிடத்தில் முன்பை விட உங்கள் நிலை வலுவாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் காணக்கூடிய மாற்றங்கள் மன தைரியத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியதாக அமையும். உங்களுடைய மூத்த சகோதரர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிவது மங்களகரமானது.

தனுசு ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2026

தனுசு ராசி அன்பர்களுக்கு, சுக்கிரனின் பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 10ம் வீடான கர்ம ஸ்தானத்தில் நடப்பதால், நீங்கள் செய்யக்கூடிய வேலை அல்லது எந்த வித தொழிலாக இருந்தாலும் அதில் முன்னேற்றத்தை காண்பீர்கள். இந்த காலத்தில் நீங்கள் ஆடை அல்லது ஆபரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். அது தொடர்பான தொழிலும் மேம்படும்.

பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பும், சூழ்நிலையும் முன்னேற்றம் அடையும். அனைவரிடமும் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளுடன் நல்லுறவு ஏற்படும்.
பரிகாரம்:

தினமும் சிவாலய வழிபாடு செய்வதும், பசுவிற்கு உணவு அளிப்பதும் நன்மை தரும்.

மகர ராசிக்கான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2026

மகர ராசி அன்பர்களுக்கு ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் நுழைவது மிகவும் அதிர்ஷ்டகரமான காலமாக அமையும். உங்களுடைய நிதிநிலை குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் உங்களுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்த விஷயங்கள் நடக்கும். கொடுத்த கடன் தொகை திரும்ப கிடைக்க வாய்ப்புகள் உண்டு. நிதிநிலை ரீதியாக மிகவும் மங்களகரமானதாக அமையும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் சிறுமிகளுக்குப் பால் பாயாசம் அல்லது வெள்ளை நிற இனிப்புகளை வழங்கவும். இதனால் சுக்கிர பகவானின் அருளை பெற உதவும்.

Source link