VIDEO: புகழ்பெற்ற சுற்றுலா தலத்தில் கூட்ட நெரிசல் – 30 பேர் உயிரிழப்பு |Haiti

கரீபியன் நாடான ஹைட்டியின் வடக்கே மிலோட் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க Citadelle Laferrière என்ற மலைக்கோட்டை அமைந்துள்ளது.

இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாகவும், ஒரு முக்கியமான சுற்றுலா மையமாகவும் உள்ளது.

இந்த மலைக்கோட்டையில் கடந்த ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர்.

அப்போது அங்கு திடீரென கனமழை பெய்ததால் மக்கள் மழையில் நனையாமல் இருக்க பாதுகாப்பான இடங்களை தேடி ஓடியுள்ளனர்.

அப்போது சுற்றுலாப்பணிகளிடையே தள்ளுமுள்ளு எற்பட்டு அது கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஹைதியின் சிவில் பாதுகாப்புத் துறைத் தலைவர் ஜீன் ஹென்றி பெட்டிட் அளித்த தகவலின்படி, கூட்டநெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source link