Virosh| சொந்த ஊரில் வரவேற்பு நிகழ்ச்சி- ராஷ்மிகா மந்தனாவுக்கு வீட்டை திருமண பரிசாக கொடுத்த பெற்றோர்

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது. ராஷ்மிகாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா செஞ்சே பெள்ளூர் கிராமம் ஆகும்.

திருமணத்துக்கு பிறகு முதல்முறையாக தனது காதல் கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அவர்களுக்கு கொடவா இன பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராஷ்மிகாவுக்கு அவரது தந்தை மதன் மந்தனா, தாய் சுமந்த் மந்தனா ஆகியோர் தங்களின் பெயரில் இருந்த வீட்டை திருமண பரிசாக வழங்கினர். இதையொட்டி விராஜ்பேட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் ராஷ்மிகாவின் பெயருக்கு வீட்டை மாற்றி எழுதி கொடுத்தனர். நேற்று முன்தினம் ராஷ்மிகா தனது காதல் கணவருடன் பிறந்தநாளை கொண்டாடினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், பிறந்தநாள் விழாவும் ஒரே நாளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link