VIT பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உழவர் சங்கமம் 2026: மண்ணோடு அறிவு இணையும் விவசாயிகளுக்கான திருவிழா

இந்த மாபெரும் வேளாண் முயற்சியை, VIT பல்கலைக்கழகம் முன்னெடுத்து நடத்துகிறது. விவசாய அறிவை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில், அனைவருக்கும் அனுமதி இலவசம்.

உழவர் சங்கமம் 2026

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம், இயற்கை முறைகள், மதிப்பு கூட்டிய தயாரிப்புகள், அரசு திட்டங்கள், சந்தை வாய்ப்புகள் – இவை அனைத்தையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பு “உழவர் சங்கமம் – 2026′.

இந்த மாபெரும் வேளாண் முயற்சியை, VIT பல்கலைக்கழகம் முன்னெடுத்து நடத்துகிறது. விவசாய அறிவை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில், அனைவருக்கும் அனுமதி இலவசம். பாரம்பரிய விவசாயத்தின் அனுபவமும், நவீன வேளாண் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமும் ஒரே மேடையில் சந்திக்கும் இந்த அறிவுத் திருவிழா:

இடம்: VIT பல்கலைக்கழக வளாகம், வேலூர்
தேதி: பிப்ரவரி 5 & 6, 2026
நேரம்: காலை 9.00 – மாலை 5.00

உழவர் சங்கமம் 2026
உழவர் சங்கமம் 2026

என்ன கற்றுக்கொள்ளலாம்?

உழவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் வேளாண் கண்காட்சி என இரட்டை பயனுடன் நடைபெறும் இந்த நிகழ்வில்,
* புதிய பயிர் ரகங்கள்
* நீர் மேலாண்மை முறைகள்
* உயிர் உரங்கள் & இயற்கை விவசாயம்
* ட்ரோன் விவசாயம்
* நவீன வேளாண் இயந்திரங்கள்
போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களையும் நடைமுறை அனுபவங்களையும் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

உழவர் சங்கமம் 2026
உழவர் சங்கமம் 2026

யாருக்கெல்லாம் பயன்?

இந்த உழவர் சங்கமத்தில்,
* விவசாயிகள்
* விவசாய மாணவர்கள்
* ஆராய்ச்சி நிறுவனங்கள்
* தோட்டக்கலை, கால்நடை, விதை துறைகள்
* தனியார் வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள்
* வேளாண் தொழில்முனைவோர்
என விவசாயம் தொடர்புடைய அனைவரும் கலந்து கொண்டு அறிவும் தெளிவும் பெறலாம்.

 VIT பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உழவர் சங்கமம் 2026: மண்ணோடு அறிவு இணையும் விவசாயிகளுக்கான திருவிழா

கண்காட்சியின் முக்கிய அம்சங்கள் :
* பாரம்பரிய விதைகள் & புதிய பயிர் வகைகள்
* நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள்
* மண் & நீர் வள பாதுகாப்பு
* உயிர் உரங்கள்
* கால்நடை & கோழி வளர்ப்பு
* ஒருங்கிணைந்த பண்ணை முறை
* மதிப்பு கூட்டிய விவசாய தயாரிப்புகள்
* விவசாய கடன் & காப்பீடு தகவல்கள்
*விதை சான்றிதழ்
* மகளிர் சுய உதவி குழுக்கள்
* விவசாய வணிகம் & வர்த்தகம்
* ட்ரோன் தொழில்நுட்பம்
* காடு வளர்ப்பு & மரக்கன்றுகள்
* இயற்கை & அங்கீகரிக்கப்பட்ட விவசாய முறைகள்
* மலைப் பயிர்கள் & தோட்டக்கலை
* தேன், காளான் வளர்ப்பு போன்ற கூடுதல் வருமான வாய்ப்புகள்
* விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் 
* அரசின் விவசாயத் திட்டங்கள்
உள்ளிட்ட பல விவரங்களை அறிந்து கொள்ளலாம். அறிவை வளர்த்து, வருமானத்தை பெருக்க உழவர் சங்கமம் – 2026 , வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தவறவிடாதீர்கள். கலந்து கொண்டு வளர்ந்து முன்னேறுங்கள்!

Source link