We are here: Britain, France, Japan support opening the Strait of Hormuz after Trump’s scolding-நாங்க இருக்கிறோம்: ட்ரம்ப் திட்டியபிறகு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆதரவு

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல் காரணமாக ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு மூடிவிட்டது. இதனால் அந்த நீர்வழித்தடம் வழியாக கச்சா எண்ணெயை கப்பல்கள் எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. எனவே ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அனைத்து நாடுகளும் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் உட்பட எந்த நாடும் அமெரிக்காவிற்கு இவ்விவகாரத்தில் நேரடியாக ஆதரவு கொடுக்க தயக்கம் காட்டி வந்தன. சில நாடுகள் நேரடியாகவே தங்களால் ஆதரவு கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டன. தற்போது ஈரான் கத்தார் போன்ற வளளைகுடா நாடுகளில் எரிவாயு தொழிற்சாலை மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு பிரிட்டன், ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கத்தார் எல்பிஜி தொழிற்சாலை

கத்தார் எல்பிஜி தொழிற்சாலை

ஆனால் ஈரானில் இஸ்ரேல் எரிவாயு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, அதன் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தின. இது தொடர்பாக அந்நாடுகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,”‘ஈரானின் அச்சுறுத்தல்கள், கண்ணிவெடிகளை வைத்தல், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்தைத் தடுப்பதற்கான பிற முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்ற தலைவர்களின் கூட்டு அறிக்கையை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

Source link