Weekly Horoscope,வார ராசிபலன் 26 முதல் 31 அக்டோபர் 2026 வரை – 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள் – weekly horoscope for 26 to 31 october 2026 brief predictions for the 12 zodiac signs

அக்டோபர் 26 முதல் நவம்பர் 1, 2026 வரையிலான இந்த வார காலத்தில் சந்திரன் உச்சம் பெறக்கூடிய நிகழ்வும், கடகத்தில் குருவும் உச்சநிலையில் சஞ்சாரம் செய்கிறார். வார இறுதியில் அவர் சிம்ம ராசிக்கு நகர்கிறார். அதேபோல் துலாம் ராசியில் புதன் சுக்கிரன் சூரியனாகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. லட்சுமி நாராயண யோகம், புதாதித்ய யோகம் உள்ளிட்ட யோகங்கள் 12 ராசிகளுக்கு தரக்கூடிய பலன்களை இந்த பகுதியில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

இந்த வாரத்தில் சந்திரனை தவிர கிரக பெயர்ச்சிகள் இல்லாவிட்டாலும், சில கிரகங்களின் சேர்க்கை காரணமாக உருவாகக்கூடிய யோகங்களால் 12 ராசிகள் மீது தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்த வாரத்தில் சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் பெறுகிறார். மேலும் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சாரம் வரக் கூடிய சந்திரன் அக்டோபர் 31ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மேலும் துலாம் ராசி சுக்கிரன் மற்றும் புதன் வக்கிர நிலையில் பின்னோக்கி நகர்ந்த வருகின்றனர். இது போன்ற கிரக சூழல் தரக்கூடிய பலன்களை தெரிந்து கொள்வோம்.

மேஷம் வார ராசிபலன்

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையுடன் நடந்தும். உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பதில் ஆர்வமாக செயல்படுவீர்கள். உங்களுடைய சேமிப்பும் வருமானமும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய தொடர்பு கொள்ளும் நண்பர்களாலும் சில ஆதாயம் தரக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் மக்களுக்கு கூடிய பயணங்கள் சாதகமானதாக அமையும். குடும்பத்தின் நிதிநிலை முன்னேற்றம் அடைய வாய்ப்பு உண்டு. வேலை தொடர்பாக புதிய வாய்ப்புகள் எதிர்பார்க்கலாம்.

நீங்கள் முடிவு எடுப்பதிலும், சில விஷயங்களுக்கு சம்மதம் தெரிவிப்பதிலும் பட வேண்டாம். உங்களுடைய படைப்பாற்றல் அதிகரிக்க கூடியதாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதும், வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டிய நாள். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வண்டி வாகன பயன்பாடுகளில் நிதானம் தேவை.

ரிஷபம் வார ராசிபலன்

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று மாதத்தில் உங்களுடைய நிதிநிலை வளர்ச்சியை தரக்கூடியதாகவும், தொழிலில் நிலை தன்மையை அதிகரிக்க கூடியதாக இருக்கும்.கடினமான பணிகளை கூட உங்களுடைய முயற்சிகளையும் சாதகமாக முடிக்க முடியும். பிறர் கூறக்கூடிய ஆலோசனைகளை கவனமாக கேட்கவும். உங்களுடைய செயல்பாடு மற்றும் வார்த்தைகளுக்கு மதிப்பு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக்கூடிய சிக்கல்கள் தீர வாய்ப்புகள் உண்டு.

நடுவில் உங்களுடைய வருமானம் மற்றும் நிதி திட்டமிடலில் கவனம் தேவை. உறவினர்கள் மற்றும் சக பணியாளர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.வாரத்தின் நடுவில் உங்களுடைய வருமானம் வளர்ச்சி காணும். தொழில் வியாபாரத்தில் நிலைத்தன்மை அதிகரிக்கும். சிக்கலான பணிகளை முடிக்க முடியும். வாரத்தின் இறுதியில் உங்களுடைய உணவு விஷயத்தில் கவன குறைவாக இருக்க வேண்டாம்.

மிதுனம் வார ராசிபலன்

இந்த வாரத்தில் மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்த முடியும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட கால நிதி திட்டங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். இந்த வாரத்தில் வேலை பல அதிகாரிக்க வாய்ப்புகள் உண்டு. சரியான திட்டமிடல் செய்வதோடு ஓய்வு எடுக்கவும் நேரத்தை ஒதுக்கவும்.

இந்த வாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அதனால் பட்ஜெட் போட்டு செயல்படுவது நன்மை தரும். வாரத்தின் நடுவில் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒத்த கருத்துள்ள நபர்களுடன் சேர்ந்து செய்யக்கூடிய பணிகள் வேகமாக முடிக்க முடியும். பணியிடத்தில் உங்களுடைய கருத்துக்களை தைரியமாகவும் கவனமாகவும் எடுத்து வைக்கவும்.வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

கடகம் வார ராசிபலன்

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு உங்களுடைய தொழிலில் சிரமங்கள் மற்றும் பொறுப்புக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. மாற தொடக்கத்தில் பணி சுமை அதிகரிக்க கூடியதாக இருக்கும். உங்கள் பணிகளை சரியாக கேட்டுவிட்டு செய்யவும். நண்பர்கள் மற்றும் சகஊழியர்களின் ஆதரவு பெறுவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகளை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.

வார இறுதியில் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் பெறுவீர்கள். சிந்தனை மிக்க செயல்பாடு முன்னேற்றத்தை தரும். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் எதிரிகளுக்கு நல்ல பலனை தரக்கூடியதாக அமையும். உங்கள் மீதான விமர்சனங்களுக்கு உடனடியாக பதில் அளிக்காமல் நிதானத்தை கடைபிடிக்கவும். இல்லை எனில் தேவை என்ற கவலை அதிகரிக்கும்.

சிம்மம் வார ராசிபலன்

சிம்ம ராசிக்கு நீங்கள் செய்யக்கூடிய தொழில், மேற்கொள்ளும் பயணங்கள் சிறப்பான பலனை தரும். உங்களுடைய தொழிலை விரிவு படுத்துவதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் புதிய யோசனைகள், கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செல்ல விட வாய்ப்புகள் உண்டு.

இந்த வாரத்தில் லாபத்தை பெறும் நோக்கில் குறுக்கு வழிகளில் செயல்படுவதை தவிர்க்கவும். புதிய நபர்களின் தொடர்புகள் உங்களுக்கு நேர்மறையான சில சிந்தனை தரும். இந்த வாரத்தில் உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சி அதிகரிக்கும்.உங்கள் உறவுகளை அனுசரித்த செல்ல வேண்டிய வாரம்.

கன்னி வார ராசிபலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு நீண்ட கால இலக்குகளை அடைய நிதி திட்டமிடலும் வேலைக்கான திட்டம் உடலும் தேவைப்படும். இந்த வாரத்தில் நிலுவையில் உள்ள பணத்தை வசூல் செய்ய அல்லது நீங்கள் கடனை திருப்பி செலுத்த சாதகமாக இருக்கும். படிப்பு, வேலை தொடரமாக பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. காப்பீடு, வரி தொடர்பான சில விஷயங்களை அவசரப்படாமல் செயல்படவும்.

வாரத்தின் நடுவில் தொழில் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடு விஷயங்களில் அவசரப்படுவதை தவிர்க்கவும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் இருக்கக்கூடிய தவறான புரிதல்கள் தெளிவு அடைய வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவு விஷயங்களை கூடுதல் கவனம் செலுத்தவும்.

துலாம் வார ராசிபலன்

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். பிறர் சொல்லக்கூடிய ஆலோசனைகளை குறித்து வைத்துக் கொள்வதும், அது குறித்து சிந்திப்பது நன்மை தரும். குடும்ப விஷயத்தையும் விட்டுக் கொடுத்து செல்ல தயாராக இருக்கவும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், உங்களுடைய பணத்தை சரியான விதத்தில் பயன்படுத்துவதற்கான சிந்தனை தேவை.
வாழ்க்கைத் துணை அல்லது வணிக பங்குதாரர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னரே அது தொடர்பான எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்கவும். சமூகத்தின் உறவு மேம்படும். உங்கள் பகட்டுக்காக செலவுகள் செய்வது அல்லது வாக்குறுதியை கொடுப்பதை தவிர்க்கவும்.

விருச்சிகம் வார ராசிபலன்

விருச்சிக ராசி சேர்ந்தவர்கள் உங்களுடைய தினசரி வழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளவும். உங்களுடைய உறவை பராமரிப்பதற்காக இனிய பேச்சு மற்றும் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். ஆரோக்கியம் மேம்படுத்த உணவு விஷயத்திலும் உடற்பயிற்சி செய்வதிலும் அக்கறை காட்டவும்.

இந்த உங்கள் வேலைகளை முடிப்பதில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள் நிதிநிலை அல்லது காதல் தொடர்பாக உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்க கூடிய காலம். பணியிடத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். அது உங்கள் உறவை சீர்குலைக்க அனுமதிக்காதீர்கள். பிறரை சந்தேகிப்பதை தவிர்ப்பதோடு, அவர்கள் கூறக்கூடிய விஷயங்களை கண்மூடித்தனமாக நம்புவதையும் தவிர்க்கவும்.

தனுசு வார ராசிபலன்

தனுசு ராசிக்கு இந்த வாரம் ஆக்கபூர்வமான வேலைகளை ஈடுபடுகிறது. ஆலோசனை கூட்டம், வாடிக்கையாளர்களுடன் முக்கிய மார்க்கெட்டிங் பேச்சு வார்த்தை வெற்றியடைய வாய்ப்பு உண்டு. வாரத்தின் அடிப்படையில் சிலரிடம் சேர்ந்து கூட்டணி அமைத்து செய்யும் வேலை மற்றும் வணிகம் நல்ல பலனை தரும்.

​முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் உணர்ச்சிவசப்படுவதைத் தடுக்க முடியும். கட்டுப்பாடு மிக்க உங்களுடைய திட்டங்களும் எதிர்பார்த்த வெற்றியை தரும். இந்த வார்த்தை உங்கள் வேலை அல்லது குடும்ப பொறுப்புகள் தொடர்பாக முக்கிய பணிகளை முன்னெடுத்து செல்லியம்மன். இன்று பிறரின் கருத்துக்களை அலட்சியப் படுத்த வேண்டும்.

மகரம் வார ராசிபலன்

மகர ராசி நண்பர்களுக்கு உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவது, உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த விதமாக உங்களுக்கு பிடித்த வீடுகளிலும் ஈடுபடவும். இந்த வாரத்தில் காதல் மற்றும் பொழுது போக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய சொத்து வாங்குவது தொடர்பாக ஆவணங்களை சரி பார்க்காமல் எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம்.
கூட்டணி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். செலவுகளை கட்டுப்படுத்துவதும், சேமிப்பின் மீது நாட்டம் கொள்வது நன்மை தரும். உங்கள் வேலை தொடர்பாக அழுத்தமான சூழ்நிலை ஏற்படலாம். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு தவிர்ப்பதும், வாக்குவாதங்களில் ஈடுபடாமல் சிந்தனை மிக்க செயல்களில் ஈடுபடவும்.

கும்பம் வார ராசிபலன்

இந்த வாரத்தில் கும்ப ராசி அன்பர்களுக்கு மகிழ்ச்சியான காலமாக அமையும். அதே சமயம் அவசரப்பட்டு முடிவு எடுப்பதையும், யோசிக்காமல் செலவு செய்வதையும் தவிர்க்கவும். உங்களுடைய குடும்ப விவகாரங்கள் மற்றும் ஆக்கபூர்வமான சில முன்னெடுப்புகள் சாதகமாக அமையும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் இனிமையாக அமையவும். உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பான விஷயங்களில் கடினமான சூழ்நிலையில் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

பணம் கொடுக்கல் வாங்கலில் சரியான சிந்தனையும் குறிப்புகளும் தேவைப்படும். உடலுக்கு தீங்கான உணவுகள் எடுத்துக் கொள்வதையும், போதைப் பொருள் பயன்படுத்துவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும். இது உங்கள் உடல் மற்றும் மனநிலையை பாதிக்க வாய்ப்பு உண்டு.

மீனம் வார ராசிபலன்

இந்த வாரத்தில் மீன ராசி சேர்ந்தவர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கியமான சில வேலைகள் முடிப்பது அல்லது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தொடர்பாக செலவுகள் அதிகரிக்கலாம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். நீங்க மேற்கொள்ளக்கூடிய சிறிய பயணங்கள் நிகழ்ச்சியை தரும். குடும்பத்தின் தேவைகளுக்காக செலவுகள் அதிகம் செய்ய வேண்டியது இருக்கும்.
வாரத்தின் நடுவில் உங்கள் குடும்பத்தின் அமைதியை காக்கவும், காதல் விஷயத்திலும் நிதானமாக செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பாக கூடுதல் கவனம் தேவைப்படும். இந்த வாரத்தில் எந்த ஒரு செயலை பொறுமையுடனும், ஒழுக்கத்துடனும் செய்து முடிக்க முயற்சிக்கவும்.

Source link