Weekly Horoscope Benefits,வார ராசிபலன் (அக்டோபர் 25 முதல் 31, 2026): சுப யோகங்களால் சாதகமான பலன்களைப் பெறும் ராசிகள் – weekly horoscope october 25 to 31, 2026: zodiac signs set to benefit from auspicious yogas

அக்டோபர் மாதத்தின் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ஏற்படக்கூடிய கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சில கிரகங்களின் சேர்க்கையால் உருவாகக்கூடிய யோகங்களால் 5 ராசிகளின் வாழ்க்கையில் தொழில், வியாபாரம், நிதிநிலை, குடும்ப வாழ்க்கை போன்ற விஷயங்களில் மங்களகரமான பலன்கள் கிடைக்க உள்ளன. எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அக்டோபர் மாதத்தின் கடைசி வாரமான 25ஆம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான காலத்தில் பல கிரகங்களின் சேர்க்கைகள் மற்றும் அதனால் யோகங்கள் உருவாக உள்ளன. அதில் இந்த வார இறுதியில் மிக முக்கிய கிரக நிகழ்வாக குரு சிம்ம ராசியில் நுழையுள்ளார். மேலும் துலாம் ராசியில் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை பல்வேறு யோகங்களை உருவாக்கக் கூடியதாகவும், அதன் மூலம் சில ராசிகள் யோக பலன்களை பெற உள்ளனர்.

ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களுக்கு அக்டோபர் மாதத்தின் கடைசி வாரம் மிகவும் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். இந்த வாரத்தில் இருக்க கூடிய கிரக அமைப்புகளால் உருவாக்கும் சுப யோகங்களின் தாக்கம் உங்களுக்கு பல்வேறு நல்ல பலன்களை தரும். குறிப்பாக உங்களுடைய கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். உங்களுடைய நிதி நிலை வலுவாக இருக்கும். மேலும் பட்ஜெட் போட்டு செயல்படுவதன் மூலம் உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். உங்களுடைய வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியானதாக மாறும்.

கடக ராசி

கடக ராசி அன்பர்களுக்கு அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் மிகவும் நன்மைகளை பெறக்கூடிய சூழல் இருக்கும். உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் மூலம் நன்மையும் அடைவீர்கள். யோகங்களால் சுப பலன்கள் அதிகம் கிடைக்கக்கூடிய நிலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். பணியிடத்தில் உங்கள் வேலைகளை முடிப்பது தொடர்பாக மூத்த நபர்களின் ஆதரவு, ஆலோசனை கிடைக்கும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், புகழும் கிடைக்கக்கூடியதாக இருக்கும். உங்களுடைய செயலுக்கு அனைத்து இடங்களில் மரியாதை கிடைக்கும்.

கன்னி ராசி

கன்னி ராசி அன்பர்களுக்கு அக்டோபர் மாதத்தின் கடைசி வாரம் அதிக நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய முக்கிய திட்டங்கள் சரியாக நிறைவேறுவதை காண்பீர்கள். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வேலை செய்யக்கூடியவர்களுக்கு அற்புதமான சூழலும், புதிய முயற்சிகள் வெற்றி தரக்கூடியதாக இருக்கும்.
​வேலை தேடக் கூடியவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வாய்ப்புகளை பெறுவார்கள். எதிர்காலத்தை மனதில் வைத்து செய்யக்கூடிய முதலீடு லாபத்தை தரக்கூடியதாக அமையும். வேலையில் வெற்றியும், தொழிலை விரிவு படுத்துவது தொடர்பாக எடுக்கக்கூடிய முயற்சிகள் சாதக பலனையும் தரும். உடல்நலம் குறித்த கவலை குறையும்.

தனுசு ராசி

தனுசு ராசி நண்பர்களுக்கு அக்டோபர் மாதத்தின் கடைசி வாரம் ஏராளமான நன்மைகளை தரும். சுபயோகங்கள் உங்களுடைய பொறுப்புகளை சரியாக முடிப்பதற்கான வாய்ப்புகளை தரும். நிதிநிலைமை மேம்படக்கூடியதாக இருக்கும்.உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களுடைய திறனை கண்டுபிடிக்க வாய்ப்பு உண்டு. உடல் நலனை மேம்படுத்தும் விதமாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் செயல்பாடுகளுக்கு ஊக்கமும், ஆதரவும் கிடைக்கும். உடற்பயிற்சி ,யோகா போன்ற விஷயங்கள் செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளவும்.

மீன ராசி

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு அக்டோபர் மாதம் கடைசி வாரம் சாதகமான பலனை தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய எல்லாம் வேலைகளிலும் நீங்கள் கவனம் செலுத்துவதன் மூலம், எதிர்பார்த்த பலனை பெற முடியும். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் நன்மையும் லாபங்களையும் அடையமுடியும்.
சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் இருக்கும்.. இருப்பினும் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். இந்த வாரத்தில் உங்களுடைய உறவுகள் வலுவடையும். அர்ப்பணிப்புடன் செய்யக்கூடிய எந்த செயலிலும் நன்மை பெறுவீர்கள். நிதி நிலையில் மரியாதையும் கணிசமாக உயரும்.

Source link