ஜூலை மாதத்தின் கடைசி வாரமாக ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையிலான இந்த வார காலத்தில் மிகவும் மங்களகரமான கிரக சேர்க்கைகள் உருவாக உள்ளன. குறிப்பாக புதன் கிரகம் மிதுன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பதால் உருவாகும் பத்ர யோகம், சில ராசிகளின் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றத்தை தருவதாக இருக்கும். குறிப்பாக அவர்களுடைய காதல் வாழ்க்கையின் வாழ்க்கையில் முன்பை விட சிறப்பாக இருக்கும். மேற்கொள்ளும் பணிகள் தொழிலில் முன்னேற்றத்தை காண்பார்கள். எந்தெந்த ராசிகள் வெற்றி கிடைக்க வலுவான வாய்ப்புகள் உள்ளன. வாராந்திர அதிர்ஷ்ட பலன்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
வாராந்திர அதிர்ஷ்ட பலன்கள் 27 ஜூலை – 2 ஆகஸ்ட் 2026 வரையான இந்த வார காலத்தில் புதன் கடந்த சொந்த ராசியான மிதுனத்தில் ஆட்சி பெற்ற அமர்ந்திருப்பதால் உருவாகும் பத்ர யோகம் பல விதத்தில் நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். அதே சமயம் சுக்கிரன் தனது நீச வீடான கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக உங்களுடைய தொழில் வாழ்க்கையில் ஆதாயமும் முன்னேற்றத்தையும் அடையலாம். உங்களுக்கு சில சவால்கள் நீடித்தாலும், பணியிடத்தில் நேர்மாறியான மாற்றத்தை காண்பீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், காதல் கைகூடவும் வாய்ப்பு உண்டு. எந்தெந்த ராசிகள் இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான பலனை பெறுவார்கள் என தெரிந்து கொள்வோம்.
ரிஷபம் அதிர்ஷ்ட வார ராசிபலன்
ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல வாய்ப்புகள் கைக்கூடும். இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் சீக்கிரம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான பலன்களை நீங்கள் பெறலாம். வேலை மற்றும் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்க பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்ப விவகாரங்களில் உங்கள் பேச்சு மற்றும் செயலில் நிதானத்தை கடைபிடிக்கவும். இல்லையெனில் சிறிது உறவில் மனக்கசப்பு அல்லது பதட்டம் ஏற்படலாம். இந்த வாரத்தில் உங்களுடைய நிதிநிலை சிறப்பாக இருந்தாலும் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: புதன் கிரகத்தின் பீஜ மந்திரமான ‘ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரோம் ஸஹ புதாய நமஹ’ என்பதை ஜபிக்கவும்.
மிதுனம் அதிர்ஷ்ட வார ஆசைப்படும்
மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த வார மங்களகரமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய பணியிடத்தில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். வேலை செய்யக்கூடியவர்கள் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால், கடினமான பணிகள் அல்லது சூழலை கூட சிறப்பாக கையாள முடியும். உங்களுடைய நிதி சார்ந்த விஷயங்களில் சரியாக கையாள்வதும் முதலீடு தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கும். உங்களுடைய காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். காதலை திருமணத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலையை மாற்ற முயற்சிபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய பணவரவு மகிழ்ச்சியை தரும்.
பரிகாரம்: கிரகங்களின் நற்பலன்களைப் பெற, புதன்கிழமையன்று அருகிலுள்ள கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதும், தேவைப்படுபவருக்கோ அன்னதானம் செய்வது நல்லது.
கடகம் அதிர்ஷ்ட வார ராசிபலன்
கடக ராசி அன்பர்களுக்கு இந்த வாரத்தில் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடக்க கூடியதாக இருக்கும். குறிப்பாக உங்களுடைய நிதிநிலை முன்னேற்றம் அடையும். முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரத்தில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கை உங்களுக்கு மங்களகரமான பலனை தரக்கூடியதாக இருக்கும்.
உங்களுடைய உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். காதல் வாழ்க்கையில் புரிதல் நன்றாக இருக்கும். பணியிடத்தில் எதிர்பாலினத்தவர் ஒருவரால் சில சங்கட மனசூழல் ஏற்படலாம். இருப்பினும் சூழலை நிதானமாக கையாள்வது நல்லது. இந்த வாரத்தில் சில மனமகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்கும்.
பரிகாரம்: நாராயணனை வழிபட்டு, விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்யுங்கள் அல்லது அதைக் கேளுங்கள்.
கன்னி அதிர்ஷ்ட வார ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த வாரத்தில் உங்களுடைய ராசி அதிபதியான புதன் வக்ர நிவர்த்தி அடைவது நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும், ஆரோக்கியம் கணிசமாக மேம்படும். இந்த வாரத்தில் காதல் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் மனவருத்தங்கள் நீங்கும்.
பணியிடத்தில் எந்தவித வாக்குவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் பேச்சு மற்றும் செயலில் நிதானத்தை கடைபிடிக்கவும். இந்த வார்த்தை உங்களுடைய தந்தை அல்லது பெரியவர்களின் ஆதரவு உங்கள் மனதிற்கு தைரியத்தை தரும்.
பரிகாரம்: வீட்டில் துளசி செடியை நட்டுப் பராமரிக்கவும். ஏற்கனவே துளசி செடி இருந்தால், தினமும் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.
மகரம் அதிர்ஷ்டம் வார ராசிபலன்
மகர ராசி அன்பர்களுக்கு இந்த வாரத்தில் குரு மற்றும் சூரியனின் செயற்கையானது உங்களுடைய ஆளுமை திறனை அதிகரிக்கும். இந்த வாரத்தில் உருவாகும் கஜகேசரி யோகம் உங்களுக்கு நன்மைகளை அதிகப்படுத்து. பணியிடத்தில் முன்னேற்றத்தை காணும் வாய்ப்பு உருவாக்கும். உங்களுடைய செயலுக்கு மதிப்பும், உங்களுக்கான அங்கீகாரம் மற்றும் ஆதரவு கிடைக்கும்.
புதிய திட்டங்களை தொடங்குவதில் ஆர்வம் காட்டியவர்கள். நிதிநிலை தொடர்பாக ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ள பெண்களிடமிருந்து ஆறுதலும் ஆதரவும் கிடைக்கும். இந்த வார இறுதியில் கொண்டாட்டம் நிறைந்ததாக இருக்கும். வீட்டில் சில சுப காரியங்கள் நடக்கும். அல்லது திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியடையும்.
பரிகாரம்: ஊறவைத்த பச்சைப்பயறைப் பறவைகளுக்கு உணவாக அளியுங்கள்.
