West Bengal: ஒரே நாளில் 250 அதிகாரிகளை இடமாற்றம் செய்த தேர்தல் ஆணையம் – உயர்நீதிமன்றத்தை நாடிய மம்தா அரசு

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் அம்மாநிலத்தில் ஒரே நாளில் 250-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி உட்பட, மாநிலம் முழுவதும் உள்ள 170 காவல் நிலைய ஆய்வாளர்கள், 83 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும் வழக்கறிஞருமான கல்யாண் பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவிற்கு எதிராகத் திங்கட்கிழமை நேற்று (மார்ச் 30) கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Source link