அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் ஒருவரின் வாக்குமூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க நீதித்துறை, மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கூடுதல் கோப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அதில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஒரு மைனர் பெண் கூறிய உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் இடம்பெற்று இருக்கிறது.
டொனால்டு ட்ரம்ப் மீது பாலியல் குற்றம்சாட்டிய பெண்ணிடம் எஃப்.பி.ஐ நடத்திய விசாரணையின் மூன்று பகுதிகளைக் கொண்ட கோப்புகள் வெளியாகி இருக்கிறது. முந்தைய கோப்புகளை வெளியிடும்போது மறைந்த பாலியல் குற்றவாளி தொடர்பான ஆவணங்களின் சில பகுதிகளை “நகல்” என்று தவறாகக் குறிப்பிடப்பட்டதால், அவை அப்போது வெளியிடப்படவில்லை என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நிர்வாகம் எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து ஜனநாயக கட்சியினர் விசாரணை வேண்டும் என்கிறார்கள். இக்கோப்பில் எஃப்.பி.ஐ டொனால்டு ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் இடம்பெற்று இருக்கிறது.
அதில் அப்பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், “‘டொனால்டு ட்ரம்பிடம் என்னை எப்ஸ்டீன் தான் அறிமுகம் செய்தார். என்னை எப்ஸ்டீன் நியூயார்க் அல்லது நியூஜெர்சிக்கு அழைத்துச் சென்றார். அதிக அறைகள் உள்ள பெரிய கட்டடத்திற்கு என்னை அழைத்துச் சென்று, ட்ரம்பிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
உடனே ட்ரம்ப் அங்கிருந்த அனைவரையும் வெளியில் போகும்படி கேட்டுக்கொண்டார். என்னை கட்டாய பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் வாய்வழியாக உறவை ஏற்படுத்திக்கொண்டபோது அவரது அந்தரங்க உறுப்பை கடித்துவிட்டேன். உடனே அவர் என்னை அடித்தார். இதனால் ஏற்பட்ட சத்தத்தில் மற்றவர்கள் மீண்டும் அறைக்குள் வந்தனர். ட்ரம்பும், எப்ஸ்டீனும் பேசிக்கொண்டதை நான் கேட்டேன். இதில் எப்ஸ்டீன் மற்றவர்களை மிரட்டுவது குறித்து பேசினார். ட்ரம்ப் பணத்தை சூதாட்டத்தில் செலவிடுவது குறித்து பேசினார்.
பாலியல் உறவின்போது எப்ஸ்டீன் என்னை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு அதனை காட்டி எனது தாயாரை மிரட்டினார்.
