“அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்த கென் இயக்கத்தில் ‘யூத்’ படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், ” ‘அசுரன்’ படத்தில நம்மக்கிட்ட காடு இருந்தா புடுங்கிடுவாங்க, காசு இருந்தா புடுங்கிடுவாங்க, படிப்பை மட்டும் எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்’னு சொன்னேன்.

ஆனா, அதை தவிர நீ எல்லாமே பண்ணிருக்க… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்லயே 3 பொண்ணுங்களோட பைக்ல உக்காந்திருக்க” என்று கென்னை தனுஷ் கலாய்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய தனுஷ், ” திடீரென கென் படம் பண்ணப்போறேன் என ஒரு நாள் வந்து சொன்னான். எதுக்குடா அவசரப்படுற, பொறுமையா இன்னும் சில படங்களில் அசிஸ்டன்ட்டா இருந்து கத்துக்கிட்டு பண்ணலாமேன்னு சொன்னேன். ஆனால், அதெல்லாம் பண்ணிடுவேன் என நம்பிக்கையா சொன்னான். அதே போல இப்போ படத்தை பண்ணி முடிச்சிட்டான்.
