Zozo: `இந்தியாவில் பிறந்து, உலக மேடையை நோக்கி' – 11 வயதேயான இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர்!

ZOZO Dot என்பது மொபைல் போனில் ஒட்டப்படும் கருவி, அதன் மூலம் நமது டேட்டாவை உடனடியாக அந்த கைப்பேசிக்கு அனுப்பி விட முடியும்.

ZOZO - ஆத்விக்

ஆத்விக் அமித் குமார் – தனக்கென இந்த உலகில் 11 வயதிலேயே முத்திரை பதித்திருக்கும் மாணவன்.

ZOZO Connect என்ற ஸ்டார்ட் அப்பின் நிறுவனர் இவர். கோவையில் இருந்து சென்னை வந்த ஆத்விக், நந்தினி தம்பதியின் மகன், “bharath ke super founders” என்கிற நிகழ்ச்சி மூலம், இவரது தெளிவான பேச்சால் பிரபலம் ஆனார்.

அங்கீகரிக்கப்பட்ட இவரது ஐடியா, இன்று ஒரு ஸ்டார்ட் அப் ஆக வளர்ந்து IITM ரிசெர்ச் பார்க்கில் நிறுவப்பட்டது.

Zozo: `இந்தியாவில் பிறந்து, உலக மேடையை நோக்கி' - 11 வயதேயான இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர்!

இந்த நிகழ்வில் ZOZO connectஇன் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் என அனைவரும் கலந்துக் கொண்டனர். தலைமை விருந்தினராக Startup Singam நிறுவனர் அருண் நாயர், கௌரவ விருந்தினராக ANOVA நிறுவனர் சந்திரசேகர் குப்பேரி மற்றும் Social Eagle நிறுவனர் தரணீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆத்விக்கின் “founding team” மேலும் நான்கு நிறுவனங்களைக் கொண்டது:

திரு. பாலசுப்ரமணியம் – Aiglx Health

திருமதி. வீனா – Accordanz

திரு. அருள்செல்வர் தோமஸ் – Briskinfosec

திரு. ராகவேந்தர் – Arcwise

ZOZO connect விசிட்டிங் கார்டுகளால் ஏற்படும் கழிவை குறைக்க தோன்றிய ஐடியாவில் உருவாகி, அதே பிலோசோபியில் இரண்டு ப்ரோடுக்ட் லான்ச் செய்துள்ளனர்.

ZOZO Dot என்பது மொபைல் போனில் ஒட்டப்படும் கருவி, அதன் மூலம் நமது டேட்டாவை உடனடியாக அந்த கைப்பேசிக்கு அனுப்பி விட முடியும்.

Zozo: `இந்தியாவில் பிறந்து, உலக மேடையை நோக்கி' - 11 வயதேயான இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர்!

ZOZO Buddy அதேபோல் ஒரு டேக் (tag), அதை ஸ்கேன் செய்வதன் மூலம் டேட்டா பரிமாற்றம் நடத்தி கொள்ளலாம். இவை இரண்டும் NFC டெக்னாலஜி மற்றும் QR கோட்களின் உதவியால் சாத்தியமானது. இந்தியா தவிர்த்து சவுதியில் இது லான்ச் செய்யப்பட்டுள்ளது.

ஆத்விக் அவரது உரையில், “ZOZO இந்தியாவில் பிறந்து, உலக மேடைக்கு தயாரானது. ZOZO World Summit மூலம் பல நகரங்களுக்குச் செல்லவிருக்கிறோம். அங்கு என்னை சந்தியுங்கள், கேள்வி கேளுங்கள், வழிகாட்டுங்கள். ஏனெனில் ஓர் இயக்கம் தனி மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. எல்லா புகழும் இறைவனுக்கே!” என்று கூறி முன்முயற்சியை இனிதே துவங்கி வைத்தார்.

Source link