தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, செவ்வாய்க் கிழமை (அக்டோபர் 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:
கோயம்புத்தூர் மாவட்டம்:
பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்:
புராணி காலனி, அவராம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவா இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம் மருத்துவமனை, ஆலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, பணிகள் நிறைவடைந்தவுடன் வழக்கம் போல் மின் விநியோகம் வழங்கப்படும் என மின் வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
