அசாம் ஓட்டலில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி

குவஹாத்தி: குவஹாத்தி ஓட்டலில் துப்பாக்கிச்சூடு நடந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

போலீஸ் கமிஷனர் பார்த்த சாரதி மஹந்தா கூறியதாவது: நாங்கள் நான்கு உடல்களை மீட்டுள்ளோம். இவை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பபட்டு உள்ளன. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை துவங்கி உள்ளோம்; ஒருவர் கைது செய்யப்பட்டார், தொடர்ந்து விசாரணை நடக்கிறது, என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. ஓட்டல் உரிமையாளருக்கும் அந்தச் சொத்தை குத்தகைக்கு எடுத்திருந்த நபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது, குத்தகைதாரரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

Source link