தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய பயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஆவணப் படத்தில், முதல்வர் விஜய் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், ‘டாகு-டிராமா’ (Docu-drama) பாணியில் தயாராகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் தமிழக திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் (டிரைலர்) ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் விஜய், லண்டனில் நடைபெற்ற ‘சில்வர்ஸ்டோன் – மிச்செலின் லே மான்ஸ் கப்’ கார் பந்தயத்திற்கு நேரில் சென்று அஜித்தின் போட்டியைப் பச்சைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பந்தயத்திற்குப் பின்னர் ரேஸ் உடை அணிந்து வந்த விஜய், அஜித்துடன் இணைந்து தேசியக் கொடியை ஏந்தியபடி போஸ் கொடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இந்த சந்திப்பு வெறும் நட்பு ரீதியிலானது மட்டுமல்லாமல், ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்திற்கானது என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். விஜய் மற்றும் அஜித் இணைந்து இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், “இரு பெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டு, ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். இதன் மூலம் இருவரும் ஒரே திரையில் தோன்றுவது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல ரவுடியை துடிதுடிக்க வெட்டி சாய்த்த கும்பல்..!! குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்..!! சென்னையில் பயங்கரம்..!!
