வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் (பெரிய) கோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் இரண்டாம் நாளான இன்று (22-10-26) காலை, அரசு சார்பில் மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய் சதய விழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ”தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்!
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும்!
தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
