அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு சார்பாக போதை எதிர்ப்பு பேரணி

சென்னை: அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு சார்பாக, போதைக்கு எதிராக, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் சார்பில், ஜூலை முழுவதும், போதைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை மூன்றாம் வாரத்தில், விழிப்புணர்வு பேரணி நடத்த, அண்ணாமலை அறிவுறுத்தி இருந்தார்.

அதன்படி, தமிழகம் முழுவதும், ‘வி தி லீடர்ஸ்’ சார்பில், மாராத்தான், நடைபயிற்சி, டிரக்கிங், ஸ்கேட்டிங் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சென்னை மேடவாக்கத்தில், சைக்கிளத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை அசோக சக்கரம் விருது பெற்ற, மறைந்த மேஜர் முகுந்தனின் தந்தை வரதராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதேபோல், தேனியில் 1,000 இளைஞர்கள் பங்கேற்ற மாரத்தான் நடந்தது. பல்வேறு இடங்களில், விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

Source link