அதிக லாபம் தந்த தங்க பத்திர முதலீடு

கடந்த நிதி ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தங்க பத்திரங்களுக்கான முன்கூட்டிய முதிர்வு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 – 21

(10வது கட்டம்)

ஒரு கிராம் தங்கம்

முதலீடு செய்தபோ து

ரூ.5,054

தற்போது கிடைப்பது

ரூ.14,158

லாபம்

ரூ.9,104

(180.13%)

2021 – 22

(4வது கட்டம்)

ஒரு கிராம் தங்கம்

முதலீடு செய்தபோது

ரூ.4,757

தற்போது கிடைப்பது

ரூ.14,158

லாபம்

ரூ.9,401

(197.62%)

ச ோ லார் பேனல் தயாரிப்பு துறையில் மிக வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வரும் ‘சாத்விக் கிரீன் எனர்ஜி’ நிறுவன பங்குகளை வாங்குவதற்கு முன்னணி தரகு நிறுவனமான ‘மோதிலால் ஓஸ்வால்’ பரிந்துரைத்துள்ளது.

அந்நிறுவனம் பரிசீலிப்பதற்கான காரணங்கள் : இந்நிறுவனம் 2025-2026ம் நிதி ஆண்டின் இறுதியில் 4.80 ஜிகாவாட் சோலார் மாடியூல் உற்பத்தி திறனை கொண்டிருந்தது. தற்போது ஒடிசாவின் கோபால்பூரில் உள்ள டாடா ஸ்டீல் ‘செஸ்’ வளாகத்தில் கூடுதலாக 4 ஜிகாவாட் மாடியூல் மற்றும் 6 ஜிகாவாட் சோலார் செல் ஆலைகளை அமைத்து வருகிறது.

இதன் வாயிலாக, 2027-2028க்குள் உற்பத்தி திறன் 8.80 ஜிகாவாட் மாடியூல் மற்றும் 6 ஜிகாவாட் செல் என்ற வளர்ச்சியை எட்டுவதோடு மட்டுமல்லாமல், 2028-2029ம் நிதி ஆண்டுக்குள் 6 ஜிகாவாட் திறன் கொண்ட ‘இங்குவாட்-வேபர்’ பிரிவிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதால் உற்பத்தி செலவு குறைந்து லாப வரம்பு கணிசமாக உயரும்.

மார்ச் 2026 நிலவரப்படி நிறுவனத்திடம் 8,000 கோடி ரூபாய் மதிப்புடைய ஆர்டர்கள் உள்ளதால் அடுத்த 18 மாத கால வருவாய்க்கு முழு உத்தரவாதம் கிடைத்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கைகளும், ‘பி.எம்., சூர்ய கர்’, ‘பி.எம்., குசும்’ போன்ற திட்டங்களும் இந்நிறுவனத்திற்கு மாபெரும் சந்தை வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆகையால் நடுத்தர முதல் நீண்ட கால முதலீட்டிற்கு இப்பங்கு மிகவும் உகந்தது என தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பெரிய நிறுவனங்களின் கடுமையான போட்டியால் லாப வரம்பு குறைதல், புதிய ஆலைகளை அமைப்பதில் ஏற்படக்கூடிய காலதாமதம் போன்ற சவால்களையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link