“அதிமுகவின் ஸ்பை தான் நிர்மல்குமார்” – ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

அமைச்சர் நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை சமயநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (19-07-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சி.டி.ஆர் நிர்மல்குமார் பேசுவதெல்லாம் பச்சை பொய். அவர் எங்கள் கூட இருந்தவர்தான். அவர் எங்கள் ஆள் தான். நாங்கள் தான் அவரை அங்கு அனுப்பி வைத்திருக்கிறோம். விஜய்யை முடித்துவிட்டு வா என நாங்கள் தான் அனுப்பி வைத்திருக்கிறோம்.

இப்போது மின்வெட்டு ஏற்படுவதற்கு நிர்மல்குமார் தான் காரணம். விஜய்யை முடிப்பதற்காக அவர் மின் தடையை ஏற்படுத்துவார், போராட்டம் நடக்கும், 200 யூனிட் மின்சாரம் தர மாட்டார். நாங்கள் அனுப்பி வைத்த ஆள் தான் அவர். அதிமுகவினுடைய ஸ்பை தான் நிர்மல் குமார்” என்று கூறினார். 

Source link