அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு தவெக கொடுத்த மறைமுக அறிவிப்பு – வேட்பாளர் பட்டியலில் வெளிப்படும் வியூகம்! – aiadmk rebel mlas plan with tvk after madurantakam dharapuram byelection

தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் தனி தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தவெக வெற்றி பெற்றது. பின் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இந்நிலையில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக அதிருப்தி எம்எல்ஏ மரகதம், சத்யபாமா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

இடைத்தேர்தலில் மும்முனை போட்டி

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் வேட்பாளராக நேற்று திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டனர்.

தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல் மற்றும் மதிமுக சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் கூடி, தங்களது கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் அறிவித்தனர். அவ்வகையில் இன்று தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு

அதனைத் தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பில் கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வென்று ராஜினாமா செய்த சத்யபாமா மற்றும் மரகதம் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளை தொடர்ந்து திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் விரையில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக விராலிமையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கரூரில் வெற்றி பெற்ற எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு தவெக சார்பில் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டது.

அவ்வகையில் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட தவெக தலைமை வாய்ப்பு வழங்குவதை மிக தெளிவான அரசியல் நகர்வாக அரசியல் நோக்குனர்கள் கருதுகின்றனர்.

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்களை இழுக்கும் வழி

இப்படியாக அதிமுகவில் வெற்றிப்பெற்று ராஜினாமா செய்தவர்களுக்கு கட்சியில் பொறுப்பும், மீண்டும் அதே தொகுதியில் போட்டிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதன் மூலம், இவர்களை போல அதிருப்தியில் இருக்கும் மற்ற எல்எல்ஏ-க்கள் எந்த தயக்கமின்றி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்து கொள்வார்கள் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தவெகதான் ஆட்சியில் இருக்கும் என அரசியல் விமர்சர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவினர் தங்களது கட்சி தலைமையில் மேல் உள்ள அதிருப்தினால், தவெகவில் இணைவது பாதுகாப்பான சூழலை கொண்டதாக இருக்கும் என்பதை இந்த வேட்பாளர் பட்டியல் மூலம் தவெக மறைமுகமாக அறிவித்துள்ளதாக கூறப்படுக்கிறது.

Source link