அதிமுக மா.செ. கூட்டம்: டிடிவி தினகரன், சசிகாவை இணைப்பது குறித்து முடிவு- எடப்பாடி நிலைபாடு என்ன? – edappadi palanisamy to announce on sasikala ttv dhinakaran rejoining aiadmk at district secretaries meeting

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வருகிற நவம்பர் 1 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் உட்கட்சிப் பூசல்

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சிப் பூசல் வெடித்தது. இதனால் தமிழக வெற்றிக் கழக அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தில், சி. வி. சண்முகம் மற்றும் எஸ். பி. வேலுமணி ஆகியோர் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் பிரிந்த நிலையில், சி. வி. சண்முகம் மற்றும் எஸ். பி. வேலுமணி அணியைச் சேர்ந்த 25 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தனர். அதனைத் தொடர்ந்து 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தொடர் தோல்விகள்

தமிழக அரசியல் களத்தில் ஆளுங்கட்சியாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் தொடர்ந்து ஏற்பட்டு வந்த உட்கட்சிப் பூசல் மற்றும் அதிமுகவினர் வேறு வேறு அணிகளாகப் பிரிந்ததே காரணமாகும். இந்த நெருக்கடியில் அதிமுக தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்து வந்த நிலையில், அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

சம்மதம் தெரிவித்த எடப்பாடி

இந்தச் சூழலில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கி உள்ள டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க, எஸ். பி. வேலுமணி மற்றும் சி. வி. சண்முகம் அணியினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இந்தச் சூழலில் மீண்டும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களைச் சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மா.செ. கூட்டத்தில் முடிவு

வருகிற நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும் தவெக சென்று பதவி வழங்காமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட அதிமுகவினரை மீண்டும் தன் பக்கம் இழுக்க ஒரு குழு அமைத்து, அதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏன் இந்த முடிவு?

கட்சியை மீண்டும் கட்டமைக்கவும், இனி வரும் இடைத்தேர்தல் மற்றும் தள்ளிவைக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களைக் கவனத்தில் கொண்டும், கட்சி மேலும் உடையாமல் இருக்கவும் எடப்பாடி இந்த முடிவை எடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சசிகலா, டிடிவி ஆகியோர் இணைவதன் மூலம், அதிமுக மீண்டும் புது உத்வேகம் பெறும் எனவும், கட்சி இனி சிதறாமல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Source link