அந்த தாக்குதலை விஜய் அரை மணிநேரமாவது தாங்கிப்பாரா? – முதல்வரின் பேச்சுக்கு சிபிஎம் கட்சியில் இருந்து வந்த கடும் கண்டனம் – cpm balakrishnan comments on the cm joseph vijay speech in the assembly

நேற்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் பேசியது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பல விவாதங்கள் எழுந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் தாக்கப்பட்டதை கேலி செய்யும் விதமாக விஜய் சட்டப்பேரவையில் சைகை காட்டியதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் முதல்வரின் நேற்றைய பேச்சிற்கு சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்பாக முதல்வர் ஜோசப் விஜய்யின் பதிலுரையுடன் நேற்று சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கியது. கடந்த வாரம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக அடுக்கடுக்கான விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்பி இருந்தார். தன்னுடைய கேள்விகளுக்கு திமுக மேல் பழியை போடாமல், முதல்வர் பதிலளிக்க வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் கோரிக்கையை முன்வைத்து இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் முதல்வர் பதிலுரையின் போது 50 ஆண்டு காலத்திற்கு முன்பான சர்க்காரிய கமிஷன் அறிக்கை, மிசா குறித்தெல்லாம் பேசினார். அதோடு மிசா குறித்து பேசுகையில் சைகை ஒன்றையும் காண்பித்தார். இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிசாவில் கைதாகி சிறையில் தாக்கப்பட்டதை கேலி செய்யும் விதமாக விஜய் சைகை காட்டியுள்ளதாக சர்ச்சைகள் வெடித்தன. இதனையடுத்து முதல்வரின் இந்த அணுகுமுறையை திமுகவை சார்ந்த தலைவர்கள் பலரும் கண்டித்து வருகின்றனர்.

Source link