அனிருத், காவ்யா மாறனின் திருமணத்திற்காக பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் கலாநிதி மாறன். இந்நிலையில் தனக்கு திருமணம் நடப்பது கடினம் என அனிருத் தெரிவித்த பழைய வீடியோ வைரலாகியிருக்கிறது.
இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் தனக்கு கல்யாணம் நடப்பது எல்லாம் கடினம் என 9 ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
அனிருத் பேட்டி
கெரியரின் உச்சத்தில் இருக்கும் அனிருத்துக்கும், சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் வாரிசான காவ்யாவுக்கும் நவம்பர் 11ம் தேதி திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் மணமகளின் அப்பா. இந்நிலையில் 2017ம் ஆண்டு பேட்டி ஒன்றில் திருமணம் பற்றி அனிருத் ரவிச்சந்தர் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பார்க்க முடிகிறது. அதில் ஒரு இசையமைப்பாளராக இருப்பதால் தனக்கு திருமணம் நடப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஏனென்றால் எங்களுக்கு எக்ஸ்ட்ரா இமோட்டிவாக இருக்கும் என்றார் அனிருத்.
கஷ்டம் என்ற அனிருத்
அனிருத் மேலும் கூறியதாவது, முதலில் நம்மை புரிந்து ஒருவர் வருவது கஷ்டம்.நம் சோஷியல் சர்கிளுக்கு அந்த நபர் சரியானவராக இருக்க வேண்டும். அதே போன்று அவரின் சோஷியல் சர்கிளுக்கு நாம் சரிபட்டு வர வேண்டும். இது எல்லாம் ஒத்துப் போவதே கஷ்டமான விஷயம். இந்த காலகட்டத்தில் இது கடினம். அதனால் எனக்கு தெரிந்து எனக்கு கல்யாணமாவது கஷ்டம் என்றே நினைக்கிறேன் என்றார். ஆனால் அவருக்கு ஏற்ற பெண்ணாக காவ்யா மாறன் கிடைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவ்யா மாறன்
திரையுலகை சேர்ந்தவராக இல்லாதபோதிலும் சினிமா மீது ஆர்வம் கொண்டவர் காவ்யா மாறன். குறிப்பாக அனிருத் ரவிச்சந்தரின் பாடல்கள் என்றால் காவ்யாவுக்கு மிகவும் பிடிக்கும். அனிருத்தை மட்டும் அல்ல அவரின் இசையையும் சேர்த்தே காதலிக்கும் பெண் கிடைத்திருக்கிறார். நமக்கு எல்லாம் ஒரு பெண் கிடைக்க மாட்டார் என்று அனிருத் நினைத்த நிலையில் அவர் எதிர்பார்த்ததை விட நல்ல பெண் கிடைத்து அவர் விரைவில் மனைவியாகப் போகிறார்.
அனிருத் சப்போர்ட்
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி காவ்யா மாறனின் அணி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அனிருத்தோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ஆதரவாளர். தல தோனி என்றால் அனிருத்துக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத், சென்னை அணிகள் மோதும் ஆட்டம் நடந்தால் அனிருத் எந்த அணியை ஆதரிப்பார், என்ன ரியாக்ஷன் கொடுப்பார் என கற்பனையாக வீடியோக்களை உருவாக்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
சைவம், அசைவம்
காதல் என்று வந்துவிட்டால் ஒருவருக்காக மற்றொருவர் தானாக விட்டுக் கொடுப்பார்கள். அனிருத், காவ்யா மாறன் விஷயத்திலும் அது தான் நடக்கிறது. சுத்த சைவம் சாப்பிடும் அனிருத்தின் வருங்கால மனைவியோ அசைவம் சாப்பிடுபவர். உனக்கு பிடித்ததை நீ சாப்பிடு, எனக்கு பிடித்ததை நான் சாப்பிடுகிறேன் என்று அவர்கள் அழகாக அட்ஜஸ்ட் செய்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் தான் பிராமணரும், அசைவம் சாப்பிடும் பெண்ணும் எப்படி திருமணம் செய்யலாம் என விமர்சிக்கிறார்கள்.
