இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் படுக்கையறையில் பெட் இருக்காது. கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் எளிமையாக வாழ நினைக்கும் அனிருத்திடம் அதிகம் உடைகளும் இல்லை.
சென்னையில் இருக்கும் அனிருத்தின் வீட்டில் ஹோம் தியேட்டர் இருக்கிறது ஆனால் பெட் இல்லை என்கிற தகவல் உங்களுக்கு தெரியுமா சினிமா ரசிகர்களே?
அனிருத் வீடு
கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டில் அசத்தி வரும் அனிருத் சென்னையில் தன் பெற்றோருடன் சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் நேரத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏசியன் பெயிண்ட்ஸுக்காக தன் வீட்டை சுற்றிக் காட்டினார் அனிருத். அந்த வீடியோ தற்போது கவனம் பெறுகிறது. அந்த வீட்டில் பல அறைகள் இருந்தாலும் அனிருத்தின் படுக்கை அறையை தான் மறக்க முடியவில்லை.
பெட்ரூம் வசதி
அனிருத்தின் படுக்கை அறையில் அழகான கட்டில் இருக்கும் என எதிர்பார்த்தால் வெறும் மேட்ரஸ் மட்டுமே இருந்தது. அவருக்கு பெட் பிடிக்காதாம். தரையில் மேட்ரஸை போட்டுத் தூங்குவதையே விரும்புகிறார். ஏன் இப்படி, ஒரு பெட் வாங்கலாம் அல்லவா என கேட்டதற்கு, இது தான் எனக்கு வசதியாக இருக்கிறது. சிங்கிள் பசங்களுக்கு தரையில் படுத்து தான் தூங்க விருப்பம் என எங்கோ படித்திருக்கிறேன் என்று மட்டும் கூறினார். அது மட்டும் அல்ல அவர் பீரோவில் துணிகளும் பெரிதாக இல்லை. குறைவான அளவில் தான் ஆடைகள் இருக்கிறது. அனிருத்துக்கு இருக்கும் வசதிக்கு டிசைன், டிசைனாக உடைகள் வாங்கி அடுக்கிவிடலாம். ஆனாலும் அவர் அப்படி செய்யவில்லை.
ஹோம் தியேட்டர்
தன் வீட்டில் ஹோம் தியேட்டர் வைக்க ஆசைப்பட்டார் அனிருத். அதன் பிறகே வீட்டை பெரிதாக்கியிருக்கிறார்கள். பை நிறைய சம்பாதித்தாலும் தனியாக வீடு எடுக்காமல் அப்பா, அம்மா உடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்வதே சந்தோஷம் என்கிறார் அனிருத். திருமணத்திற்கு பிறகு அனிருத் அதே வீட்டில் வசிப்பாரா, இல்லை காதல் மனைவி காவ்யா மாறனுடன் புது வீட்டிற்கு செல்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அனிருத் வீட்டில் ஒரு அறையை ஆபீஸாக வைத்திருக்கிறார்.
ஹால், புகைப்படங்கள்
எங்க வீட்டு ஹாலுக்கு வந்தால் அப்பா தான் பாஸ். என்ன வேலை பார்க்கிற, லைஃப்ல என்ன செய்யப் போகிற என கேள்வி கேட்பார் என்று சிரித்தார் அனிருத். தான் பெரிய பிரபலமான ராக்ஸ்டாராக இருந்தாலும் வீட்டிற்கு வந்துவிட்டால் சாதாரண பையன். அப்பா, அம்மாவுக்கு அவர்களின் அனிருத் மட்டுமே. ஸ்டார் எல்லாம் கிடையாது. அது தான் வீட்டிற்கு வந்ததும் கிடைக்கும் அற்புதமான ஃபீலிங் என்று தெரிவித்தார் அனிருத். அனிருத் வீட்டு ஹாலில் அவர் குழந்தையாக இருந்ததில் இருந்து தற்போது வரை எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் ஃபிரேம் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படமும் அங்கு இருக்கிறது.
