நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், டாஸை இழந்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 225/4 ரன்களை அடித்த நிலையில், இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணி, 19.4 ஓவர்களில் 230/6 ரன்களை குவித்து, இறுதியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில், நியூசிலாந்து அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்து பார்க்கலாம்.
1.பிரேஸ்வெல் சொதப்பல்: முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், முதல் 5 பேட்டர்கள் அபாரமாக பேட்டிங் ஆடிய நிலையில், கடைசி நேரத்தில் களமிறங்கிய மைக்கேல் பிரேஸ்வெல் 6 பந்தில் 7 ரன்களை மட்டுமே அடித்தார். அவரால், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட முடியவில்லை. பிரேஸ்வெல், இந்த 6 பந்தில் ஒரு 20 ரன்கள் வரை அடித்திருந்தால், நியூசிலாந்து அணி 235+ ரன்களை அடித்து வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியிருக்கும்.
2.பவர் பிளேவில் சொதப்பல்: நியூசிலாந்து அணி, பவர் பிளேவில் 94 ரன்களை விட்டுக்கொடுத்தது. 226 ரன்கள் இலக்கை துரத்தும்போது, பவர் பிளேவில் நியூசிலாந்து அணி, சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்திருக்க வேண்டும். 65 ரன்கள் வரை விட்டுக்கொடுத்திருந்தாலே இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.
பவர் பிளேவில், 3ஆவது ஓவரில் லாக்கி பெர்குஷன், ஒரு ஒயிட் பவுண்டரியையும், 4ஆவது ஓவரில், ஆடம் மில்னே ஒரு ஒயிட் பவுண்டரியையும் விட்டுக்கொடுத்தனர். இப்படி, இலவசமாக 10 ரன்களை வாரி வழங்கியதால்தான், பவர் பிளேவில் இந்திய அணியால், 94 ரன்கள் வரை எடுக்க முடிந்தது. இந்த இரண்டு பௌலர்கள் செய்த தவறுதான், தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.
3.பீல்டிங்கில் சொதப்பல்: வழக்கத்திற்கும் மாறாக, இன்று நியூசிலாந்து அணி, பீல்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. இதுவும், தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 12.5ஆவது பந்தில் அக்சர் படேலின் கடைசினமாக கேட்சை மிட்செல் சாண்ட்னர் பிடிக்கவில்லை.
அடுத்து, மிகமுக்கியமான நேரத்தில், 17.6ஆவது பந்தில், நமன் தீர் அடித்த லட்டு கேட்சை லாக்கி பெர்குஷன் பிடிக்கவில்லை. இதில், நமன் தீர் கேட்சை பிடித்திருந்தால், நியூசிலாந்து அணியின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகியிருக்கும். அந்த கேட்சை விட்டப் பிறகு, முக்கியதான நேரத்தில், நமன் தீர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை அடித்து, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மேலும், சிலமுறை பவுண்டரி லைனிலும் நியூசிலாந்து அணி சிறப்பாக பீல்டிங் செய்யவில்லை. ஒரு ரன் ஓட வேண்டிய இடத்தில், 2 ரன்களை ஓடவிட்டு சொதப்பினார்கள்.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி, அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும். அடுத்து, அக்டோபர் 27, 30 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நவம்பர் 4ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
