அனிருத் காதல்: காதலிப்பதும், காதலிக்கும் பெண்ணையே அதுவும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதும் எந்த காலத்திலும் எளிதான விஷயம் இல்லை. அந்த பாக்கியம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு கிடைத்திருக்கிறது. கெரியரில் மட்டும் அல்ல காதலிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் அவரின் 10 ஆண்டுகால பழைய பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது. காதல் பிரேக்கப் ஆகிவிடாமல் இருக்க ஒரு மூன்று டிப்ஸ் கொடுங்களேன் என அப்பேட்டியில் அனிருத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, பொய் சொல்லாமல் இருந்தாலே பிரேக்கப் ஆகாது. ஒரு டைமுக்கு பிறகு taken for granted என்று இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் இதை எல்லாம் செய்தும் கூட காதல் முறிவு ஏற்படத் தான் செய்கிறது என்றார்.
உண்மை தான் அனிருத்: அனிருத் என்னவோ 10 வருடங்களுக்கு முன்பு தான் அறிவுரை செய்திருக்கிறார். ஆனால் அது தற்போதைய காதலர்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. பொய் சொல்வது தான் பல காதல் ஜோடிகளை பிரித்துவிடுகிறது என அனுபவசாலிகள் கூறியிருக்கிறார்கள். இந்த வீடியோ மட்டும் அல்ல அனிருத்துக்கு காதல் திருமணம் தான் நடிக்கும் என டாரட் கார்டை பார்த்து 10 ஆண்டுகளுக்கு முன்பு தந்தி டிவி நிகழ்ச்சியில் ஜெயஸ்ரீ சொன்ன வீடியோவும் வைரலாகியிருக்கிறது.
திரையுலகில் யாராவது காதலித்தால் அது எப்படியாவது கசிந்துவிடும். அப்படி இருந்தும் கூட அனிருத், காவ்யா மாறன் தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்தார்கள். அவர்கள் காதலிப்பதாக சினிமா ரசிகர்களுக்கு சந்தேகம் வந்ததே தவிர காதல் தான் என யாராலும் உறுதி செய்ய முடியவில்லை. காதலிப்பது நம் தனிப்பட்ட விஷயம். அது யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை என இருவரும் பிரைவேட்டாக வைத்துவிட்டார்கள்.
தற்போதும் கூட நாங்கள் காதலர்கள், எங்களுக்கு நவம்பர் 11ம் தேதி கிரீஸில் திருமணம் நடக்கவிருக்கிறது என்று அனிருத்தோ, காவ்யாவோ இதுவரை உறுதி செய்யவில்லை. பாரத பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் கொடுத்த புகைப்படங்கள் வெளியானதால் காதலி காவ்யா மாறனை திருமணம் செய்து கொள்கிறார் அனிருத் என்பது தெரிய வந்தது.
அனிருத், காவ்யா ரிசப்ஷன்: ஆனால் அந்த அழைப்பிதழ் திருமணத்திற்கானது இல்லை என்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கானது என்றும் தகவல் கிடைத்திருக்கிறது. கிரீஸ் திருமணத்தில் மாறன்கள், திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பம், அனிருத் குடும்பம் என மொத்தமே நான்கு குடும்பங்கள் தான் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்யப் போகிறார்கள் என வலைப்பேச்சு மூலம் தகவல் வெளியாகியிருக்கிறது. நான்கு குடும்பங்கள் பயணம் செய்ய நான்கு தனி விமானங்களை முன்பதிவு செய்திருக்கிறாராம் மணமகள் காவ்யாவின் தந்தை கலாநிதி மாறன்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இது கலாநிதி மாறனுக்கு இரட்டை சந்தோஷம் அளிக்கும் நேரம் ஆகும். தன் ஒரே மகள் காவ்யாவுக்கு அவர் மனதிற்கு பிடித்த அனிருத்துடன் திருமணம் நடப்பதில் ஒரு சந்தோஷம். தான் தயாரித்த ஜெயிலர் 2 படம் திரைக்கு வந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ. 477 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதில் இன்னொரு சந்தோஷம் ஆகும்.
Source link
