அப்படிப்போடு..!! EB பில் முதல் கேஸ் சிலிண்டர் புக்கிங் வரை..!! இனி வாட்ஸ் அப்பில் கட்டணம் செலுத்தலாம்..!! மெட்டா அறிவிப்பு..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப், தனது பயனர்களின் வசதிக்காக புதிய கட்டணச் சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இனி தங்கள் அன்றாட அத்தியாவசிய பயன்பாட்டுக் கட்டணங்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தே நேரடியாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தும் வகையில் இந்த அதிரடி மாற்றத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இச்சேவை NPCI கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வ ‘பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்’ (Bharat Bill Payment System – BBPS) நெட்வொர்க்குடன் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதன்மூலம், பயனர்கள் வெவ்வேறு அரசு அல்லது தனியார் செயலிகளுக்கு மாற வேண்டிய அவசியமின்றி, வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் (Payments) பக்கத்திற்கு சென்று நேரடியாக தங்களின் கட்டணங்களை செலுத்த முடியும்.

குறிப்பாக, மின்சாரக் கட்டணம், சமையல் எரிவாயு முன்பதிவு மற்றும் கட்டணம், குடிநீர் வரி, சுங்கச்சாவடி ஃபாஸ்டேக் ரீசார்ஜ், ஆயுள் மற்றும் வாகன காப்பீட்டு பிரீமியங்கள், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைகள் மற்றும் வங்கிக் கடன் தவணைகள் உள்ளிட்ட சுமார் 30 முக்கியப் பிரிவுகளின் கீழ் வரும் 22,722 சேவை வழங்குநர்களுக்கு உடனடியாக கட்டணம் செலுத்தும் வசதி இதில் இணைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையில் கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற செயலிகளுக்கு நேரடிப் போட்டியாக, வாட்ஸ்அப் செயலியை ஒரே தளத்தில் பன்முகப் பயன்பாட்டு தளமாக மாற்றும் நோக்கில் மெட்டா நிறுவனம் இந்த முக்கிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.

புதுச்சேரி வருகிறார் நித்யானந்தா..? மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை..!! போலீஸ் பாதுகாப்பு கேட்டு முதல்வரிடம் மனு..!!

Source link