தற்போது தனுஷ் அரசியலில் இறங்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில் , விக்னேஷ் சிவன் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். அதில் , “நான் தனுஷ் சாரை மிஸ் செய்கிறேன். சினிமாவில் அவரை போன்று வேலை செய்ய இன்னொருவர் பிறந்து வர வேண்டும். அவர் வேலை செய்யும் முறையினை பார்த்து , அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ? என்று கூட நான் பயந்திருக்கிறேன். மும்பையில் நானும் அவரும் ஒரே அறையில் தான் தூங்குவோம். அவர் அதிகாலை 5 மணி வரை ஏதேனும் வேலை செய்து கொண்டு இருப்பார்.
5 மணிக்கு படுக்க செல்லும் அவர் , ஆறரை மணிக்கு என்னை எழுப்பி விட சொல்லிவிட்டு தூங்குவார். ஆனால் , நான் எழுமுன்பே அவர் எழுந்து , நான் முன்னாடி போறேன் , நீ பின்னாடி வா என்று சொல்வார். அவர் ஒரு நாள் இரு நாள் இல்லை, தினமும் அப்படி தான் செய்வார். அவரைப் பார்த்தால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும், தினமும் ஒருவரால் எப்படி இவ்வாறு உழைக்க முடியும்? அதனால் தான் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அவர் எனக்கு அப்பா மாதிரி , அப்படி தான் என் மனதில் பதிந்து இருக்கிறார். அவர் மீது நான் வைத்துள்ள மரியாதை என்றும் போகாது” என்று கூறியிருந்தார்.
