”அப்போது, ட்ரம்ப் என்னை வலுக்கட்டாயமாக…”; 33 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த பிரபல அழகி

இடைக்கால தேர்தல் நெருங்கிவிட்டதால் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், ஜனநாயக கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.  

வருகின்ற நவம்பர் 3 அன்று, அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றும் என்பதால், இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

அதனால், ஆளும் குடியரசு கட்சியினரும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரும் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  

அதில், ஜனநாயகக் கட்சியினர் நடத்​திய நேர்​காணல்​களில், சுவிட்​சர்​லாந்து முன்னாள் அழகி பியாட்​ரிஸ் கியூல், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராகத் தெரி​வித்த கருத்​துகள் இடம் பெற்​றுள்​ளன. அவர் கூறுகையில், ”கடந்த 1993 ஆம் ஆண்டு எனக்கு 24 வயது. அப்போது, நியூயார்க்​கில் உள்ள பிளாசா ஓட்டலில் நடை​பெற்ற அழகிப் போட்​டி​யில் பங்​கேற்​றேன். அந்த சமயத்தில் தான், தற்​போதைய அமெரிக்க அதிபர் ட்​ரம்ப்பை முதன்​முதலில் சந்​தித்​தேன். அப்போது, அந்த ஓட்​டல் ட்ரம்ப்புக்​குச் சொந்​த​மானதாக இருந்​தது.

அவர் என்னைச் சந்தித்துவிட்டுச் சென்றதும், பிளாசா ஓட்டலின் மேல் தளத்திற்கு வருமாறு அவரது பிரதிநிதி ஒருவர் என்னை அழைத்தார். அந்த அழைப்பைத் தொடர்ந்து நான் அந்த அறைக்குள் சென்றதும், ட்ரம்ப் என்னை வலுக்கட்டாயமாக பா@யல் வன்கொடுமை செய்தார். அப்போது, எனது உடை கிழிந்ததுடன்,  ரத்த காயங்களும் ஏற்பட்டன” என்று தெரிவித்துள்ளார்.  இந்த பா@யல் புகார் அரசியல் வட்டாரத்தில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த புகாருக்கு ட்ரம்ப் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.