வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைதின் சைதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் நவீத். மனைவி நாஜியா சல்மா. இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினர். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
நேற்று முன்தினம்(ஜூலை 20) கலிபோர்னியாவில், இவர்கள் பயணித்த கார், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இந்த சம்பவத்தில் நாஜியா சல்மா, மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்தனர். ஷேக் நவீத் மற்றும் இளைய மகள்படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹைதராபாத்தில் வசிக்கும் அவரது தந்தை ஷேக் அப்துல்சயீத், அமெரிக்கா செல்வதற்கு உடனடியாக விசா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
