அமெரிக்க கனவுக்கு புதிய செக்..! H-1B விசா விதிகளில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள அதிரடி மாற்றங்கள்!

விசா தேர்விலும் புதிய அணுகுமுறை :

2026 நிதியாண்டுக்கு பிறகு, 2027 நிதியாண்டுக்கான H-1B விசா தேர்வு நடைமுறையில் அதிகத் திறனும் அதிக ஊதியமும் கொண்ட பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான எடையிட்ட தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் ஊதிய நிலை முக்கியத்துவம் பெறுகின்றன.

PERM ஊதிய முறையிலும் மாற்ற முன்மொழிவு!

வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நிர்ணயிக்கும் முறையை மாற்ற அமெரிக்கத் தொழிலாளர் துறை 2026 மார்ச் மாதத்தில் முன்மொழிவை வெளியிட்டது. இது H-1B மட்டுமின்றி, நிரந்தர வேலைவாய்ப்பு அடிப்படையிலான PERM முறையையும் உள்ளடக்கியது. இருப்பினும், முன்மொழிவு வெளியானது மட்டுமே அது இறுதி விதியாகிவிட்டது என்று பொருளல்ல.

இந்தியப் பணியாளர்கள் கவனிக்க வேண்டியவை:

இந்த மாற்றங்களால் அமெரிக்காவில் வேலை தேடும் இந்திய இளைஞர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பு திட்டங்களை முன்கூட்டியே கவனமாக வகுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.. குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டுப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது அவர்களின் கல்வித் தகுதி,பணித்திறன், அனுபவம் மற்றும் ஊதிய நிலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.. இதனால் அதிகத் திறன் கொண்ட பணியாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம் என்றாலும் அனைவருக்கும் விசா கிடைப்பது உறுதி என்று கூற முடியாது..

மேலும் 1,00,000 டாலர் கட்டணம் தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னர் அமெரிக்க நீதிமன்றங்கள் அதன் வசூலுக்கு இடைக்கால தடைகளை விதித்துள்ளன..2026 அக்டோபர் நிலவரப்படி அந்த கட்டணம் வசூலிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.வழக்குகள் தொடர்ந்து நடைபெறுகின்றன..எனவே இந்த கட்டணம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு விட்டது என்றும் கூற முடியாது..

Source link