– நமது நிருபர் –
அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி இடைக்காலத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதிபரின் 4 ஆண்டுகால பதவி காலத்தின் சரியாக நடுப்பகுதியில் (2 ஆண்டுகள் நிறைவடையும் போது) இந்த தேர்தல் நடத்தப்படுவதால் இது இடைக்காலத் தேர்தல் என்று அழைக்கப்படுகிறது.
தேர்தலில் வாக்காளர் மோசடி குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு அதிபர் டிரம்ப் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். அவரது பதிவு: கடந்த மற்றும் வரவிருக்கும் இடைத்தேர்தலில் நடக்கும் வாக்காளர் மோசடிகளை ஆதாரத்துடன் தெரிவிப் பவர்களுக்கு 10 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 9.49 கோடி) வெகுமதி வழங்கப்படும்’ என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
யாரோ ஒருவர் தேர்தல் மோசடி செய்வதாக வெறும் தகவலை மட்டும் தெரிவித்தால் இந்தப் பணம் கிடைக்காது. அந்தத் தகவலின் அடிப்படையில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற வேண்டும்.
இந்த பரிசுத் தொகை அரசு நிதியிலிருந்து வழங்கப்படுமா அல்லது தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படுமா என்ற அதிகாரப்பூர்வ விவரங்களை அதிபர் டிரம்ப் தனது பதிவில் குறிப்பிடவில்லை.
