”அமைச்சர்களுக்கே இந்த நிலைமையா?”; அதிரடி நடவடிக்கையில் இறங்கிய முதல்வர்

கோயிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொள்ளப் பட்டியலின அமைச்சர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தசரா பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில்,  மைசூர் மாளிகை வளாகத்தில் உள்ள கோட்டே ஆஞ்சநேயர் கோயிலில் கடந்த அக்டோபர் 21 அன்று நந்தி பூஜை நடைபெற்றது. இதில், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.  

அதன்படி, இந்த பூஜையில் கலந்துகொள்ள முதல்வர் சிவகுமார், கலாச்சார அமைச்சர் சிவராஜ் தங்கடகி, வேளாண் அமைச்சர் பி.எம். நரேந்திர சுவாமி, அறநிலையத் துறை அமைச்சர் கே.எஸ். பசவந்தப்பா ஆகியோர் மைசூர் மாளிகை வளாகத்திற்கு வருகை தந்தனர்.  

முதல்வர் சிவகுமார் மற்றும் மைசூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் யதீந்திர சித்தராமையா ஆகிய இருவர் மட்டுமே இந்த பூஜைக்கு அனுமதிக்கப்பட்டனர்.  ஆனால், குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களையும் காவல் கண்காணிப்பாளர் ரிஷ்யந்த் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்.  

இதனால், அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இது குறித்துத் தகவலறிந்து வந்த முதல்வர், 3 அமைச்சர்களையும் உள்ளே அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்த முதல்வர் சிவகுமார் தலைமைச்செயலாளர் ஷாலினி ரஜினீஷ்க்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.   

இதனிடையே,  இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், இதற்கு ஏராளமான பட்டியலின அமைப்புகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.